"கடும் நடவடிக்கை தேவை!" விழுப்புரத்தில் பெரியார் சிலை தேசம்.. டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை: விழுப்புரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்திற்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் பெரியார் படிப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகே மார்பளவு பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது.

இங்கு தான் ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழா கொண்டாடப்படும். நேற்று நள்ளிரவு நேரத்தில் இங்குள்ள சிலர் பெரியார் சிலையை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
பெரியார் சிலையின் கண்ணாடி, மூக்கு பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், சிலையைச் சேதப்படுத்திய நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications