சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இவருமா".. எகிறும் ஸ்டாலின் இமேஜ்.. "ஜாயிண்ட்" ஆன மெகா புள்ளி.. கூல் தலைவருக்கு என்னாச்சு?

திமுகவில் இணைந்து வருகிறார்கள் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் மாற்று கட்சியினரை கவர்ந்து வரும் நிலையில், அமமுகவிலும் பல முக்கிய தலைவர்களை ஈர்த்துள்ளது தெரியவந்துள்ளது.. அதன் முத்தாய்ப்பாகத்தான், அக்கட்சியின் முக்கிய புள்ளி ஒருவர் திமுகவில் "ஜாயிண்ட்" ஆகி உள்ளார்..!

சசிகலா ரிலீஸ் ஆவதற்கு முன்பிருந்தே, அவரை வரவேற்பதற்கான வேலையை தொடங்கியவர் டிடிவி தினகரன்.. சென்னை வரும்போது, தமிழகமே கவனிக்கும்படி "ரோடு ஷோ"வையும் நடத்தி சசிகலாவுக்கே ஸ்வீட் ஷாக் தந்தவர்.

ஆனால், அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா திடுதிப்பென்று அறிவிப்பார் என்று டிடிவி தினகரன் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.. அன்றைய இரவெல்லாம் தூங்காமல் தவித்தார்.. தன்னுடைய ஆதரவாளர்களை வீட்டிற்கு வரவழைத்து விடிய விடிய ஆலோசனை நடத்தினார்.. எதுவுமே பிரயோஜனம் தரவில்லை.

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி

 அப்செட்

அப்செட்

இதற்கு பிறகு, தேர்தலிலாவது மறைமுகமாக சசிகலா உதவி செய்வார், பிரச்சாரம் செய்வார் என்று தினகரன் எதிர்பார்த்தார்.. ஆனால், சசிகலா கோயில் கோயிலாக போய் பூஜை செய்ததுதான் மிச்சம்.. தேர்தலிலும் தினகரன் மண்ணை கவ்வினார்.. அதாவது கடந்த தேர்தலில் 3வது இடத்தை பிடித்த டிடிவி, இந்த முறை தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டார்.. சீமான் 3வது இடத்துக்கு உயர்ந்துவிட்டார்.. அதாவது, தினகரனின் 5 சதவீத வாக்கு வங்கியும், இரண்டரை சதவீதமாக பாதியாக குறைந்துவிட்டது.

 சசிகலா

சசிகலா

இப்படிப்பட்ட சூழலில், சசிகலாவின் ஆடியோ ரிலீஸ் ஆரம்பமானது.. "நான் இருக்கேன், கவலைப்படாதீங்க, பார்த்துக்கலாம், பேசிக்கலாம்" என்று சசிகலா அந்த ஆடியோவில் சொல்வதை கேட்டு, அமமுகவில் உள்ள நிர்வாகிகளே கூர்ந்து கவனித்து வருகின்றனர்.. அதுமட்டுமல்ல, இனியும் தினகரனை நம்பி இருப்பதில் பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கும் வந்துள்ளதாக தெரிகிறது.

பூசல்கள்

பூசல்கள்

இதனால், பல அமமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இணைந்து வருகிறார்களாம்.. அதிலும் திமுகவில் இணைவது அதிகமாகி உள்ளதாம்.. காரணம், அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி பிரச்சனை அதிகரித்து வருகிறது.. அவர்களுக்குள் நடந்து வரும் பூசலே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.. அதனால், கட்சி எப்படியும் மேலும் 2 ஆக பிரியுமோ என்ற பரவலான சந்தேகமும் உள்ளது.

 டேமேஜ்

டேமேஜ்

இதுபோக, எத்தனை மாஜிக்கள், ஊழல் புகார்கள் தொடர்பாக வழக்குகளை சந்திக்க போகிறார்களோ தெரியவில்லை.. இதனால், அதிமுகவின் இமேஜ் மேலும் டேமேஜ் அடையவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அதிமுகவைவிட திமுகவில் பலரும் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.. சமீப காலமாகவே ஸ்டாலினின் செயல்பாடுகள், மாற்று கட்சிக்கார்களையும் கவர்ந்து வருவதாலும், பலரும் திமுகவில் இணைந்து வருவதாலும், அமமுக தரப்பில் இருந்தும் சில முக்கிய புள்ளிகள் திமுக பக்கம் தாவ உள்ளார்களாம்..

 நெல்லை

நெல்லை

இதில் ஒருபகுதியாகத்தான், அமமுக நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த பரமசிவ அய்யப்பன், தன் ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்துள்ளார்... அவர் மூலமாக பிற அமமுக தலைவர்களுக்கும் திமுக குறிவைத்து வருவதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது... மேலும் அமமுக தொண்டர்களை இழுக்க அதிமுகவும் முயன்றுவருகிறது.

 டிடிவி தினகரன்?

டிடிவி தினகரன்?

இதனால் அமமுக கூடாரமே ஆடிப்போய் உள்ளது.. முதல் வேலையாக, தினகரன் இந்த நிலையை மாற்றவேண்டும், வீட்டில் முடங்கியிருக்காமல் தொண்டர்களை சந்தித்து அடிக்கடி பேச வேண்டும்... இல்லாவிட்டால் அமமுக என்ற கட்சியே நாளடைவில் காணாமல் போய்விடும் என்ற முணுமுணுப்புகளும் எழ ஆரம்பித்துவிட்டன. "கூல் தலைவர்" வெளியே வருவாரா? அமமுகவை செங்குத்தாக தூக்கி நிறுத்துவாரா? பார்ப்போம்..!

English summary
AMMK Executive joined in DMK due to CM Stalins Performance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X