அண்ணாமலை மனசை குளிர வைத்த அமமுக.. டிடிவி தினகரன் சைலண்ட் சம்பவம் பண்ணுறாரே.. புதுசா இருக்கே!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்காக அமமுக கட்சி தீவிரமாக களப்பணிகளை செய்து வருகிறது. முக்கியமாக தென் மாவட்டங்களிலும், கொங்கிலும் அமமுக கட்சி நிர்வாகிகள் தீவிரமாக களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார்.
அங்கே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை திமுக சார்பாக களமிறக்கப்பட்டு உள்ள வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள சிங்கை ராமச்சந்திரன் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
பாஜக தலைவர் அண்ணாமலையும் சில இடங்களில் லீடு எடுக்கிறார். ஆனாலும் நேரடியாக களத்தில் போட்டி நிலவுவது திமுக vs அதிமுக இடையில்தான்.
கடுமையான போட்டி; அதிமுக, பாஜகவிற்கு பல்வேறு கவுண்டர் பிரிவு வாக்குகள் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. திமுகவிற்கு ஒரு சில கவுண்டர் பிரிவு வாக்குகள், கம்யூனிஸ்ட் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் உட்பட பரந்துபட்டு வாக்குகள் வரும் வாய்ப்புகள் உள்ளன.
கொங்கில் இருக்கும் ஒரு சில முக்குலத்தோர் வாக்குகளும் திமுக பக்கமே செல்லும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த வாக்குகளை பாஜக பக்கம் கொண்டு செல்வதற்கான தீவிரமான களப்பணிகளை அமமுக செய்து வருகிறதாம். அமமுக முக்குலத்தோர் பலம் காரணமாக, அந்த கட்சி தீவிரமாக பாஜகவிற்காக களப்பணிகளை மேற்கொண்டு வருகிறதாம்.
அண்ணாமலை கோவை : கோவையில் அண்ணாமலைக்காக கிரவுண்ட் வேலைகளை செய்யும் அமமுக தென் மாவட்டங்களிலும் பாஜகவிற்காக பணிகளை தீவிரமாக செய்கிறதாம்.
பாஜக கூட்டணியில் தமிழகத்தில் தேனி, திருச்சி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. தேனியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். திருச்சியில் செந்தில் நாதன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தேனியில் திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கனவே களமிறக்கப்பட்டு உள்ளார் இவரும் முன்னாள் அமமுக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதிகளில் அமமுக நிர்வாகிகள் மொத்தமாக குவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ளவர்கள் ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர். நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்காக கிரவுண்டு வேலைகளை செய்ய அமமுகவினர் களமிறக்கப்பட்டு உள்ளனர். டெல்டாவில் இதேபோல் டிடிவி தரப்பு ஆட்களை இறக்கி பணிகளை செய்து வருகிறது.
பாஜக கூட்டணியில் அமமுக முதல்முறை இணைந்துள்ள நிலையில் பாஜகவே வியக்கும் விதமாக அமமுக தீவிரமாக களப்பணிகளை செய்வது வருகிறது. பாஜகவே வியக்கும் விதமாக அமமுக செய்யும் கிரவுண்டு வேலைகள் பாஜக நிர்வாகிகளுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு சில முக்குலத்தோர் வாக்குகள் ஸ்விங் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications