ஆம்பன் நம்மை தாக்காது.. ஆனால் இன்றும் நல்ல மழை பெய்யும்.. தமிழகத்திற்கு காத்திருக்கும் செம மழை!
ஆம்பன் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: ஆம்பன் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் மூன்று நாட்களுக்கு முன் உருவான ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்காது என்று வானிலை மையம் கூறியுள்ளது. ஆனால் இந்த புயல் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது. ஆம்பன் புயல் தற்போது அதி தீவிர சூப்பர் புயலாக மாறியுள்ளது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் வரும் 20ம் தேதி கரையை கடக்கிறது.

மழை வாய்ப்பு
இந்த நிலையில் ஆம்பன் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். அங்கு கடல் அலைகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது.

மேற்கு கடற்கரை பகுதி
அதேபோல் மேற்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகளிலும் தீவிரமாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ராமநாதபுரம், பாம்பன் பகுதிகளில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்க கடல் பகுதியில் மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதி
அதேபோல் இந்த புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கொங்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தருமபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இதனால் மழை பெய்யும். அங்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்யும்.

சென்னை சாரல்
சென்னையில் இன்னும் சில நாட்களுக்கு சாரல் மழை பெய்யும். அதேபோல் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 4 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கும்பகோணம், நாகப்பட்டடினம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications