பிரமாண்ட பார்க்கிங், ஓய்வறை.. வேற லெவலில் மாறப்போகும் திருச்செந்தூர் ரயில் நிலையம்
சென்னை: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் பல்வேறு ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ரயில் நிலையமும் மேம்படுத்தப்படுகிறது. இதற்காக ரயில்வே ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி பிரமாண்டமாக, அலங்கார வளைவுடன் உருவாகிறது. இதேபோல் பார்க்கிங் பகுதி, கூடுதல் அறைகளும் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வருகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். கடற்கரையில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தமிழகம் முழுக்க இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

திருச்செந்தூர் ரயில் நிலையம்
குறிப்பாக தைப்பூசம், மாசி திருவிழா, கந்தசஷ்டி போன்ற விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும். இதேபோன்று குலசை முத்தாரம்மன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. மைசூருக்கு அடுத்த படியாக தசரா விழா வெகு விமரிசையாக குலசையில் தான் கொண்டாடப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வேடமணிந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
பெரும்பாலும் பக்தர்கள் பலரும் ரயில் சேவையினையே பயன்படுத்தி வருகிறார்கள். திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு வந்து தான் கோவிலுக்கு செல்கிறார்கள். 100 ஆண்டுகள் பழமையான திருச்செந்தூர் ரயில் நிலையத்தினை ரயில்வே புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. ரயில்வேயின் இரண்டாம் ரேங்கில் இருக்கும் ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
ரூ.41 கோடி ஒதுக்கீடு
அந்த வகையில் திருச்செந்தூர் ரயில் நிலையமும் மேம்படுத்தப்படுகிறது. பிரமாண்ட கார் பார்க்கிங், முகப்பு பகுதி நுழைவு வாயில் அமைத்தல், பயணிகள் ஓய்வெடுக்க அறை, கூடுதல் கட்டிடம் என மொத்தம் ரூ.41 கோடி மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முகப்பு பகுதி பிரமாண்டமாக, அலங்கார வளைவுடனும், முதலாவது பிளாட்பாரத்தின் தெற்கு பகுதியில் கூடுதல் கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது.
ரயில் நிலையத்தின் நுழைவு வாசலின் வடக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஸ்டாண்டும், தெற்கு பகுதியில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் வசதியும் அமைக்க மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோன்று நடைமேடை விரிவாக்கம், பயணிகள் ஓய்வறை, காத்திருக்கும் அறை போன்ற உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படுகிறது.
பயணிகள் கோரிக்கை
தற்போதைய காலத்திற்கு ஏற்ப பயணிகளுக்கு தேவையான பல்வேறு நவீன வசதிகளும் உருவாக்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்து முடியும் போது, திருச்செந்தூர் ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும். தற்போது திருச்செந்துர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும், பாலக்காடுக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகிறது. நெல்லை - மணியாச்சி இடையே இருமார்க்கத்திலும் பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் ரயில் சேவைகளை அதிகரிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications