தமிழ்நாட்டில் 60 ரயில் நிலையங்கள்.. மத்திய அரசு எடுத்த சூப்பர் முடிவு.. ரயில்வே அதிகாரி தகவல்
சென்னை: மத்திய அரசு பழைய ரயில்கள் பலவற்றை நவீனப்படுத்தி மேம்படுத்தி வருகிறது. பல்வேறு ரயில் நிலையங்கள் அம்ரீத் பாரத்' திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு அற்புதமாக மாற்றப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் 90 நிலையங்களை மேம்படுத்த ரூ.934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
'அம்ரீத் பாரத் ஸ்டேஷன்' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ள 90 நிலையங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் மட்டும் 60 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.

ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அமிர்த பாரத் ரயில் நிலைய திட்டத்தை ரயில்வே அமைச்சகம் 2023ம் ஆண்டில் கொண்டு வந்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் ரயில் நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது.
ரயில் நிலையங்களில் அத்தியாவசிய வசதிகளை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைக்கப்படும். ரயில் நிலையங்களில் ஏற்கனவே உள்ள வசதிகளுக்கு மாற்றாக புதிய வசதிகள் உருவாக்கப்படுகிறது. மேலும் தகவல் பலகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஆகியவை ரயில் நிலையங்களில் உறுதி செய்யப்படும். பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் பெரிய, சிறிய நகரங்களில் உள்ள நிலையங்கள் இந்த அம்ரீத் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அம்ரீத் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,275 நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் தெற்குவே ரயில்வேயின் உள்ள சென்னை, திருச்சி, சேலம், மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் 90 நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஆய்வு நடத்தி, விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க ஆலோசனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த 90 நிலையங்களை மேம்படுத்த ரூ.934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

'அம்ரீத் பாரத் ஸ்டேஷன்' திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டத்தில் மொத்தம் 90 நிலையங்கள் மேம்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 2023-24-ம் நிதியாண்டில் முதல் கட்டமாக ரூ.934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், சென்னை எழும்பூர், கிண்டி, அம்பத்தூர், நாகர்கோவில், கூடுவாஞ்சேரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருச்செந்தூர், ஈரோடு, கரூர், தென்காசி, அரக்கோணம் உள்ளிட்ட 60 நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications