பல்வீர்சிங் மீதான புகார்கள்? நடந்தது என்ன? விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ்.நியமனம்! -தமிழக அரசு
சென்னை: பல்வீர் சிங் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ்.ஸை நியமித்துள்ளது தமிழக அரசு.
ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அமுதா ஐ.ஏ.எஸ்.க்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான விவரம் வருமாறு;
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்.69/2023 என்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி பல்வீர் சிங், இ.கா.ப., அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக காவல் நிலை ஆணை 151-இன்கீழ் சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள 26.03.2023 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரால் உத்தரவிடப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில், திரு. பல்வீர்சிங், இ.கா.ப., அவர்கள் 29.03.2023 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த திரு. ராஜ்குமார், முதல்நிலைக் காவலர், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம், திரு.போகபூமன், காவலர், வி.கே.புரம் காவல்நிலையம், திரு.சந்திரசேகரன், காவல் ஆய்வாளர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம், திருமதி பி.ராஜகுமாரி, கல்லிடைக்குறிச்சி வட்டக் காவல் ஆய்வாளர், திரு. ஏ.பெருமாள், வி.கே.புரம் வட்டக் காவல் ஆய்வாளர், திரு.என்.சக்தி நடராஜன், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட சார்-ஆய்வாளர், திரு.எம்.சந்தானகுமார், தலைமைக் காவலர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம், திரு.வி.மணிகண்டன், முதல்நிலை காவலர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி புகார்கள் தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் 26.03.2023ஆம் நாளிட்ட உத்தரவிற்கிணங்க, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு, தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 03.04.2023 அன்று சமர்ப்பித்துள்ளார்.
சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை மற்றும் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் இந்நிகழ்வு தொடர்பாக ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட 04.04.2023-ஆம் நாளிட்ட கடிதத்தின் மூலம் அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில், தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பல்வீர்சிங், இ.கா.ப., மீதும் மற்ற காவல் துறையினர் மீதும் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணை மேற்கொள்ள திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்களை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications