நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. வழக்கறிஞருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு
சென்னை: நீதித் துறையில் இருப்பவர்களே , நீதிமன்றத்தின் மீது கல் எறிந்து இருப்பதாக வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் ஒருவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளராக இருந்த பூர்ணிமா, மேல்நிலை வகுப்பு படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், பின்னர் மைசூருவில் சட்டப்படிப்பும் முடித்து நீதித்துறை பணியில் சேர்ந்திருப்பதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய கோரி வழக்கறிஞர் சதிஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, பதிவாளர் பூர்ணிமா, பள்ளிப்படிப்பை முடித்துள்ளதற்கான ஆதாரங்களை சுட்டிக்காட்டி, நீதித்துறைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி சதீஷ்குமாருக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சதீஷ்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுக்க உத்தரவிட்டது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்க செய்ய, உயர்நீதிமன்ற சிறப்பு பணி அதிகாரி கணபதிசாமி மற்றும் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி ஆகியோரை நியமித்து உத்தரவிட்டது.
இதற்கிடையில் வழக்கறிஞர் சதிஷ்குமார் தனது மூத்த வழக்கறிஞர், வாசுதேவன் அறிவுறுத்தலின் படியே வழக்கு தொடர்ந்ததாக பதில் மனு தாக்கல் செய்தார். கணபதிசாமி மற்றும் நாகஜோதி அளித்த அறிக்கையை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வு,
பதிவாளர் பூர்ணிமாவுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதித்துறை நீதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்ததுள்ளதாக சுட்டிகாட்டினர்.
நீதித்துறை சாராதவர்கள் மட்டுமல்லாமல் நீதித்துறையில் இருப்பவர்களும், இந்நீதிமன்றத்தின் மீது கல் எறிந்து இருப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சதீஷ்குமார் மற்றும் வாசுதேவன் இருவரும் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளது நிர்பணமாகியுள்ளதாக தீர்ப்பளித்தனர்.
நடந்த சம்பவத்திற்கு சதீஷ்குமார்,மன்னிப்பு கோரியுள்ளதை சுட்டி காட்டிய நீதிபதிகள் அவருக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததுடன் அவர் மீண்டும் வழக்கறிஞராக பணிபுரிய அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அதே சமயம் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காத வாசுதேவனுக்கு 1 மாத சிறை தண்டனை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் 1 ஆண்டு வழக்கறிஞர் பணிபுரிய தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
-
சென்னை பெருங்குடி ஹாஸ்டலில் குளித்த 29 வயது பெண்.. மறைந்திருந்த இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications