இன்று மகா சிவராத்திரி! இரவெல்லாம் கண் விழித்திருக்க முடியாதா? அப்ப இந்த 1 மணிநேரமாவது தூங்காதீர்கள்!
சென்னை: மகா சிவராத்திரியான இன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்க முடியாதவர்கள் இந்த ஒரு மணி நேரமாவது விழித்திருங்கள். இந்த ஒரு மணி நேரத்தை தவறவிடாதீர்கள்.
இதுகுறித்து பிரியா லட்சுமணன் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிவபெருமானுக்கு கொண்டாடப்படக் கூடிய முக்கியமான விழாக்கள் என்றால் அது கார்த்திகை மகா தீபம், ஆருத்ரா தரிசனத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த ஒரு விழாவுக்கு மட்டும்தான் ஈசனுடைய பெயராலேயே மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தோட சக்தி ஆற்றல் முழுவதும் உங்களை நோக்கி வரும் ஒரு இரவு என்றால் அது மகா சிவராத்திரி. ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான்தான் பிரபஞ்சமாக இருக்கிறார்.
இந்த சிவத்தை உணரும் ராத்திரிதான் சிவராத்திரி. மகா சிவராத்திரியான இன்று சிவன் கோயில்களில் 4 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஒரு சிலர் இரவு நேரம் முழுவதும் கண் விழித்திருப்பார்கள். ஆனால் சிலரால் இரவு முழுவதும் கண் விழித்திருக்க முடியாத சூழல் இருக்கும்.
இப்படி இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் இன்று நள்ளிரவு 12.15 மணி முதல் 12.45 மணி வரை, அதாவது இரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையாவது விழித்திருங்கள். இது மிகவும் முக்கியமான நேரம் ஆகும்.
இந்த நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என பெயராகும். சிவபெருமான் தன்னை லிங்கோத்பவராக வெளிக்காட்டிய நேரமும் இதுதான். பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி பூஜித்த நேரமும் இதுதான். அது மட்டுமில்லாமல் இந்த பிரபஞ்சத்தோட மொத்த சக்தி ஆற்றலும் இந்த பூமியை நோக்கி வரும் நேரமும் இதுதான்.
இந்த நேரம் ரொம்ப முக்கியமானது, நமது முதுகுத்தண்டை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து தியானம் செய்வதுதான். இந்த ஒரு மணி நேரத்தை தவறவிடாமல் மகாசிவராத்திரியில் சிவனை நினைத்து தியானம் செய்யுங்கள். இந்த ஒரு மணி நேரமும் உங்கள் முதுகுத்தண்டை நேராக வைத்து தியானம் செய்து சிவத்தை உணருங்கள். மகா சிவராத்திரியை கொண்டாடுங்கள். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இன்று காலை முதலே பலர் உபவாசத்தை எடுத்துக் கொண்டு விட்டனர். இன்ற இரவு 7.30 மணி முதல் முதல் கால பூஜை தொடங்குகிறது. இந்த நேரமானது கோவிலுக்கு கோவில் மாறுபடும். அடுத்தது இரவு 10.30 மணிக்கு, நள்ளிரவு 12 மணிக்கு, அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு என 4 கால பூஜைகள் நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications