Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞர் நாணயத்தில் சாதனை.. எம்ஜிஆர் நாணயத்தில் அதிமுக வரலாற்று பிழை.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஆட்சியில் வரலாற்று பிழை செய்துள்ளார்கள். அண்ணா நூற்றாண்டின் போதும், கலைஞர் நூற்றாண்டின் போதும், அதாவது அவர்களின் நூற்றாண்டை கொண்டாடும் காலக்கட்டத்திலேயே அவர்களின் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. ஆனால் எம்ஜிஆரின் 102வது பிறந்த நாளில் தான் அவரது நினைவு நாணயம் வெளியிடப்பட்டது என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் பேட்டியின் போது கூறினார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "கலைஞர் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட நாணயம் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறியாமையை காட்டுகிறது. 4.5 ஆண்டு முதலமைச்சர் ஆக இருந்தவருக்கு தெரியாமல் இருக்கிறது. நாணயம் வெளியிடுவது மத்திய அரசு- நிதித்துறை அமைச்சகம் இதுபோன்ற நாணயங்களை வெளியிடுகிறது. ரிசர்வ் வங்கியை உருவாக்கியது அம்பேத்கர்.

kalaignar coin AIADMK

அவர் சிறந்த பொருளாதார நிபுணர். அவர் கொண்டுவந்த கான்செப்ட் தான் ரிசர்வ் வங்கி. அவர் வகுத்து கொடுத்த விதியின் படி, அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளில் இருக்கும். காயின் என்பது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். அந்த அடிப்படையில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.

2009ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு விழாவின் போது காயின் வெளியிடப்பட்டது. அப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர்த்து தமிழும் இடம் பெற செய்தார் கலைஞர் கருணாநிதி. அதில் அண்ணாவின் கையெழுத்து இடம் பெற்றிருந்தது. இதனை நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்.

kalaignar coin AIADMK

இப்போது அவரது வழியில் வந்த முதல்வர் ஸ்டாலின், கலைஞரின் நூற்றாண்டு விழா காயினில் தமிழ் வெல்லும் என்ற கலைஞரின் கையெழுத்துடன் வெளியிட வைத்துள்ளார். இது மகத்தான சாதனை. இதை பாராட்ட முடியாவிட்டாலும், எடப்பாடியின் அறியாமையை காட்டுகிறது. காயினில் தாய்மொழியை இடம் பெற செய்திருப்பதை பாராட்டி இருக்க வேண்டும் அல்லது ரிசர்வ் வங்கி வகுத்த விதிகளை அறிந்து பேச வேண்டும்.

ஆனால் அதை விட்டுவிட்டு வெந்ததை தின்னுட்டு வந்ததை பேசிட்டு போகிறார் எடப்பாடி பழனிசாமி. பொறுப்புள்ள பதவியில் இருந்தவர் இப்படி பேசியிருப்பது வருந்தத்தக்கது. இதற்கு முதல்வர் ஸ்டாலினும், ஆ ராசாவும் விளக்கம் அளித்திருக்கிறார். கொள்கை திமுக பாஜகவுடன் எதிர்முனையில் இருக்கிறது. இருந்தாலும் மறைந்த தலைவர் கலைஞரை பெருமைப்படுத்தும் வகையில் நாணயம் வெளியீட்டு விழா நடந்துள்ளது. அதை பிரச்சனை இல்லாமல் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள்.

அதிமுக ஆட்சியில் வரலாற்று பிழை செய்துள்ளார்கள். அண்ணா நூற்றாண்டின் போதும், கலைஞர் நூற்றாண்டின் போதும், அதாவது அவர்களின் நூற்றாண்டு கொண்டாடும் காலக்கட்டத்திலேயே அவர்களின் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. ஆனால் எம்ஜிஆரின் 102வது பிறந்த நாளில் தான் அவரது நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி எவ்வளவு அலட்சியமாக இருந்தார் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

எம்ஜிஆரின் 102ம் ஆண்டில் இடம் பெற்ற நினைவு நாணயத்தில் இந்தி இடம் பெற்று இருந்தது. அதை எடப்பாடி பழனிசாமி கவனிக்கவில்லையா.. நம்ம முதுகில் அழுக்கைவைத்துக் கொண்டு அடுத்தவர்களை பற்றி கூற வேண்டுமா.. தமிழை அவர்கள் இடம் பெற செய்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த அளவிற்கு விஷய ஞானம் இல்லாதவர் என்று தான் சொல்வேன்.. இதுபோல் நாணயம் வெளியிடுவதற்கு முன்பு என்னென்ன சிறப்புகள் இடம் பெற்றிருந்தது என்பதை ஆராய்ந்து இருந்திருக்க வேண்டும். அதிகாரிகளிடம் அதுபற்றி கேட்டிருக்க வேண்டும்." என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் கூறினார். மேலும் பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார். அதனை வீடியோவில் பாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+