கலைஞர் மறைவுக்கு தேம்பி தேம்பி அழுத கேப்டன் விஜயகாந்த்.. இது வெள்ளை மனசு.. நெகிழும் ரசிகர்கள்
சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மரணம் அடைந்த போது, தேம்பி தேம்பி அழுது அஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த். அவர் அன்று அஞ்சலி செலுத்திய வீடியோவை இன்று பகிர்ந்துள்ள பலர், இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகிறார்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலாமனார். அவரது உடலுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்த சென்னை வந்துள்ளனர். சென்னையில் உள்ள பலர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில் எத்தனை பேருக்கு உதவினார் என்பது அவரது மரணத்திற்கு பின்னர் தான் தெரியவந்துள்ளது. சினிமாவில் சான்ஸ் தேடிஅலைந்த பலருக்கு பசி ஆற்றினார். தன்னிடம் உதவி என்று கேட்டுவந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவிகளை வாரி வழங்கி இருக்கிறார். இதெல்லாம் அவர் சினிமாவில் நடித்த காலம்முழுவதும் செய்தார். அரசியலுக்கு வந்த பின்னரும் செய்தார்.
விஜயகாந்த் அரசியல் ரீதியாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார். திருமண மண்டபம் இடிக்கப்பட்ட போதும் சரி, அதன்பிறகு ஜெயலலிதா உடன் கூட்டணி வைத்தது போதும் சரி கடுமையாக விமர்சித்தார். எந்த இடத்திலும் கலைஞரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை. ஆட்சி மற்றும் அதிகாரம் குறித்தே விமர்சித்தார். கலைஞர் கருணாநிதி மீது அளவற்ற பாசம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்தின் திருமணத்தை நடத்தி வைத்ததே கலைஞர் கருணாநிதி தான். 1990 இல் திருமணம் நடந்தது.
2016ம் ஆண்டு விஜயகாந்த்தை கூட்டணியில் இழுக்க கருணாநிதி எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ அது கடைசி நேரத்தில் கைகூடாமல் போனது. இதனிடையே கலைஞர் கருணாநிதி 2018ம் ஆண்டு மரணம் அடைந்த போது, மெரினாவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர் கலைஞர் நினைவிடம் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.
அவரது கண்ணீரை பார்த்த பலர், இவரையா நாம் கடுமையாக விமர்சித்தோம் என்று அரசியல் கடந்து வருந்தினார்கள். அதேபோல் கலைஞர் மரணம் அடைந்த செய்த கேட்டு அவர் வெளியிட்ட வீடியோவிலும், உடைந்து தேம்பி தேம்பி அழுதார். அது கல் நெஞ்சையும் கரையை வைத்தது. இந்த இரண்டு வீடியோக்களையும் இப்போது மீண்டும் வெளியிட்டுள்ள ரசிகர்கள், அவர் மரணம் அடைந்ததை நினைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் ஒருவர் கூறியுள்ளார். கேப்டனின் உண்மையான பாசம் என்று வீடியோ குறித்து கூறிய ஒருவர், அவருக்கு பொது இடத்தில் சமாதி அமைக்க வேண்டும். மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றார். இன்னொருவர் வெளியிட்ட பதிவில், அழுவுற ஆம்பிளைய நம்ப கூடாதுன்னு நினைச்சேன். ஆனா கேப்டன் அழுகுறத பார்க்கும் போது என்னுடைய எண்ணம் தவறோன்னு தோணுது. ஒரு நல்ல ஆத்மாவை தமிழ்நாடு இழந்து விட்டது. உங்களுக்கு பல நன்றிகள் அய்யா என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications