அஞ்சலை யாருக்கும் அஞ்சல.. சின்னவீடு டூ பெண் தாதா.. வட சென்னை விஐபிக்கு நீதிபதி தந்த தீர்ப்பை பாருங்க
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணம் சப்ளை செய்த விவகாரத்தில் பாஜ மாஜி நிர்வாகி அஞ்சலைக்கு குற்றவியல் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இடம்பெற்ற நபர்கள் பெயர்களில் சிலர், கடந்த வருடம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அஞ்சலையின் கைது நடவடிக்கையும், அவருக்கு அளித்துள்ள நீதிமன்ற தீர்ப்பும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை நிதி உதவி வழங்கியதாக ஐகது செய்யப்பட்டவர் அஞ்சலை.. ஆனால், ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். பிறகு மாஜர்கான் தந்த புகாரில் கைதானார்..

யாரிந்த மாஜர்கான்? புளியந்தோப்பு 3வது தெருவை சேர்ந்தவர் 44 லயதுடைய மாஜர்கான்.. இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வீடு புரோக்கர் தொழில் செய்கிறார்..
வழக்கு என்ன?
தன்னுடைய குடும்ப செலவுகளை நிறைவேற்ற கடந்த 2023 நவம்பரில் அஞ்சலை என்ற பெண்ணிடம் ரூ.4 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
கடன் வட்டிக்கு வழங்கப்பட்ட இந்த தொகையை அவரால் தொடர்ந்து மாதந்தோறும் செலுத்தி வந்ததாகவும், 5 மாதங்களில் ரூ.8 லட்சம் வரை திருப்பிச் செலுத்தி விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.. ஆனால், அஞ்சலையும், அவரது கூட்டாளிகளும் கூடுதலாக ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் கேட்டு மாஜர்கானை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது ரூ.4 லட்சம் கடனுக்கு மாதம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வீதம் 5 மாதம் 8 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனாலும் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கேட்டு மாஜர்கானை அஞ்சலை மிரட்டினாராம்..
புளியந்தோப்பு பெண் தாதா
பிறகு தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று மாஜர்கான் புளியந்தோப்பு போலீஸில் புகார் அளித்தார். இந்த புகார் பதிவு செய்யப்பட்டதும் போலீசார் அஞ்சலை மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சென்னை பெருநகர 10வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
2 தரப்பினரின் வாக்குமூலங்களையும் போலீஸ் தரப்பின் ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், இறுதியாக அஞ்சலைக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 2000 ஆயிரம் அபராதமும் விதித்தது.. இன்னொரு சட்டப்பிரிவின் கீழ் 2 வருடங்கள் சாதாரண தண்டனையும், ரூ.13000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு பிரிவின் கீழ் 1 வருட தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து அபராத தொகை 13000 கோர்ட்டில் செலுத்திய அஞ்சலை, இன்னும் ஒரு மாதத்துக்குள் அப்பீலுக்கு செய்யப்போவதாகவும், அதற்குரிய மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
யார் இந்த அஞ்சலை
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் அஞ்சலை.. சின்ன வயதிலேயே வடசென்னையாக புளியந்தோப்பு பகுதிக்கு இவரது குடும்பத்தினர் குடியேறிவிட்டனர்.. ஆடுதொட்டி பகுதியில் கழிவுகளை தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்..
அஞ்சலைக்கு காதல் திருமணம் நடந்தது.. நாளடைவில் வடசென்னையில் கஞ்சா விற்பனை தாதாவாக வலம் வர துவங்கினார் அஞ்சலை. ஆடுதொட்டி பகுதியிலேயே ஆடு, மாடு வாங்கி விற்பவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டார்.. இதில் பணம் கொட்ட தொடங்கவும், வட்டி தொழிலும் விரிவடைந்து, விஐபிகளின் தொடர்பும் விரிவடைந்துள்ளது.
ஆற்காடு சுரேஷ்
பிறகு ராயப்பேட்டை சிவில் சப்ளை குடோனில் வட்டி தொழிலை செய்தபோதுதான், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் அறிமுகமானார்.. இதற்கு பிறகு அஞ்சலைக்கும் ஆற்காடு சுரேஷூக்கும் கள்ளக்காதல் பற்றிக்கொண்டது.
ஒருகட்டத்தில் கணவரை உதறி தள்ளிவிட்டு ஆற்காடு சுரேஷூடன் அஞ்சலை ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார்.. ஆனால், அரிசி கடத்தலில் நடந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷ் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அப்போது, ஜெயிலில் ஆந்திர ரவுடி சின்னா என்பவர் ஆற்காடு சுரேஷூக்கு பழக்கமாகி உள்ளார்.. இதனால் அஞ்சலைக்கும் சின்னா அறிமுகமானார்.. சின்னா மூலம் பல ரவுடிகள் அஞ்சலைக்கு பழக்கமாகி, அவர்கள் மூலம் வட்டி தொழிலையை செய்து பணத்தை அள்ளினார் அஞ்சலை..
சின்ன வீடு அஞ்சலை
பிறகு தொழில் போட்டி காரணமாக சின்னாவுக்கும் ஆற்காடு சுரேஷூக்கும் மோதல் அதிகமாகி, அது பல கொலைகள் வரை சென்றது.. இந்த கொலைகள் தொடர்பாக ஒவ்வொரு முறையும் ஆற்காடு சுரேஷ் ஜெயிலுக்கு போனார்.
ஒருமுறை புளியந்தோப்பில் கள்ளக்காதலி அஞ்சலையை பார்க்க ரகசியமாக வந்துபோவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. அஞ்சலை வீட்டுக்கு நடுராத்திரி வந்த சுரேஷை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தது நினைவிருக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு முறை ஜெயிலுக்கு போகும்போதெல்லாம், அஞ்சலைதான் பணத்தை கொட்டி, ஆற்காடு சுரேஷை வெளியே கொண்டு வந்தார்.
ஜெயலலிதா ஆட்சி
தான் ஒரு பெரிய பெண் தாதா என்பதால், கோயில்களுக்கு டொனேஷன் உள்ளிட்ட பல நற்காரியங்களை அஞ்சலை செய்துள்ளார்.. அதற்கு பிறகுதான் பாஜவில் சேர்ந்தார்.. ஆனால், கட்சியில் சேர்ந்ததுமே மகளிர் அணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. பிறகு வடசென்னை மேற்கு மாவட்ட துணை தலைவி பொறுப்பு தேடி வந்தது..
கடந்த ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் கொஞ்சம் அடங்கியிருந்த அஞ்சலை, ஜெ.மறைவுக்கு பிறகு ஆட்டம் அதிகரித்துவிட்டதாம்.. பிறகு ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஞ்சலையின் பெயர் அடிபட்டு அதற்கு பிறகே ஜெயிலுக்கு போனார்.. இதனால் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்..
ஜெயிலுக்கு சென்ற ஒரு வருடத்திலேயே வெளியே வந்த அஞ்சலைக்கு இப்போது மீண்டும் 2 வருடம் தண்டனை கிடைத்துள்ளது.
இந்த தீர்ப்பால் புளியந்தோப்பு பகுதியில் நீண்ட காலமாக பிரச்சனையாக இருந்த வட்டி வசூல் மிரட்டல்களுக்கு ஒரு முடிவு கட்டப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications