டிரெண்டான மஹிந்திரா BE6e கார்! குறுக்கே நெட்டிசன் அடித்த கமெண்ட்! கடுப்பாகி விளாசிய ஆனந்த் மஹிந்திரா
சென்னை: மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா தனது மஹிந்திர நிறுவனத்தின் கார் வடிவமைப்புகள், சேவைத் தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை பற்றி வந்த கமெண்ட் ஒன்றிற்கு பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான BE6e மற்றும் XEV 9e ஆகிய கார்கள் இணையத்தில் ஹிட் அடித்துள்ளன.
இணையம் முழுக்க BE6e மற்றும் XEV 9e கார்கள் டிரெண்டாகி வருகின்றன. மஹிந்திரா தனது புதிய மின்சார வாகன வரிசையான BE6e மற்றும் XEV 9e ஆகியவற்றை அறிமுகப்படுத்திய நிலையில் மக்கள் பலரும் அதை பற்றியே பேசி வருகின்றனர். பார்க்க கொஞ்சம் டெஸ்லா போல இருக்கும் கார் முழுக்க முழுக்க பைட்டர் ஜெட் மாடலில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் வலுவான தோற்றத்துடன் உள்ளே ஸ்லீக் வடிவமைப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர்.. நீங்கள் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளும் முன் மஹிந்திராவின் முந்தைய மாடல் கார்களில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யுங்கள். உங்கள் பணியாளர்களை சரி செய்யுங்கள்.. உங்கள் கார்களின் ஸ்பேர் பார்ட்ஸ் பிரச்சனை உள்ளது. அதை சரி செய்யுங்கள்.
நீங்கள் முதலில் உங்கள் கார்களை சரியாக ஆய்வு செய்து.. முறையான ஆய்விற்கு பின் அறிமுகம் செய்யுங்கள். ஹூண்டாய் போன்ற கார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் உங்கள் கார் எந்த விதத்திலும் உயர்ந்தது இல்லை. அழகானதும் இல்லை. உங்கள் டிசைன் டீம் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது. அல்லது நீங்கள் மோசமாக இருக்கிறீர்களா? உங்கள் கார்களை பெரிதாக இருக்கிறது என்று சிலர் வாங்குகிறார்கள். மற்றபடி அதில் தரம் இல்லை. அதேபோல் பாதுகாப்பும் இல்லை.
ஆனந்த் மஹிந்திரா பதிலடி: மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், நீங்கள் சொல்வது சரிதான், சுஷாந்த். நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஆனால் நாங்கள் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
நான் 1991 இல் நிறுவனத்தில் சேர்ந்தபோது, பொருளாதாரம் அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் வளர்ந்தது.
ஒரு உலகளாவிய ஆலோசனை நிறுவனம் எங்களிடம் வந்து கார்களை தயாரிக்காதீர்கள்.. அதற்கு எதிர்காலம் இல்லை.. அதனால் கார் வணிகத்தை விட்டு வெளியேறுமாறு கடுமையாக அறிவுறுத்தியது, ஏனெனில் அவர்களின் பார்வையில், வெளிநாட்டு பிராண்டுகளுடன் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அதை மீறி நாங்கள் துணிச்சலாக களமிறங்கினோம்.
30 ஆண்டுகளுக்கு பிறகும், நாங்கள் இன்னும் கடுமையாகப் போட்டியிடுகிறோம். இப்போதும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாங்கள் கடும் போட்டி அளித்துக்கொண்டு இருக்கிறோம்.
உங்கள் போஸ்டில் உள்ளதைப் போலவே.. நாங்கள் கடுமையான சிடுமூஞ்சித்தனம், சந்தேகம்-மற்றும் முரட்டுத்தனம் ஆகியவற்றை எதிர்கொண்டு உள்ளோம். ஆனால் இவ்வளவு கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டும் கூட நாங்கள் மார்க்கெட்டில்தான் இருக்கிறோம். ஆம் நாம் செல்வது இன்னும் பல மைல்கள் உள்ளன. தொடர் முன்னேற்றமே நமது மந்திரமாக இருக்கும். உங்களின் விமர்சனம் மூலம் எங்களுக்கு நீங்கள் இன்னும் ஆற்றலை ஊட்டி உள்ளீர்கள் .. அதற்கு நன்றி, என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications