Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்மளோட கடமை என்ன தெரியுமா? ஆளுநரின் "சரஸ்வதி கடவுள்" பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: படிக்கும் போது மேஜையில் கடவுள் சரஸ்வதி படத்தை வைத்து விட்டு படித்தால் நிச்சயம் அறிவு பெருகும் என்று கூறிய ஆளுநர் கருத்தை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி இன்று கொடைக்கானலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அநத வகையில், கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும் என்று கூறினார்.

anbil mahesh poyyamozhi governor rn ravi

அப்போது மாணவர்களிடம் உரையாற்றிய ஆளுநர் ரவி, "எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?"எனக் கேள்வி எழுப்பினார். மேலும் "இனி வரும் காலங்களில் டெஸ்க்கில் கல்வி கடவுள் சரஸ்வதியின் படத்தை வைத்து வணங்கிவிட்டு படித்தால் அறிவு நிச்சயம் பெருகும். சரஸ்வதி வந்தனம் பாடலை பள்ளியில் பாட பழக்கப்படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.

படிக்கும் போது மேஜையில் கடவுள் சரஸ்வதி படத்தை வைத்து விட்டு படித்தால் நிச்சயம் அறிவு பெருகும் என்று ஆளுநர் கருத்தை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், "அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவில் "It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform" என வரையறுத்துள்ளார். அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தை விடப்பட்டு பாடப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் விடுபட்ட வார்த்தைக்கும் ஆளுநருக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய டிடி தமிழ் தொலைக்காட்சி, தவறுதலாக நடந்துவிட்டதாகவும் அதற்காக ஆளுநரிடம் மன்னிப்பு கோருவதாகவும் விளக்கம் அளித்து இருந்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானல் வருகை தந்த போது கூட, இந்த விவகாரத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஆளுநரா? ஆரியநரா? என்ற பதாகைகளுடன் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, நேற்று கொடைக்கானல் முழுவதும் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் பாடல் விவகாரம் தொடர்பான சர்ச்சைக்கு நடுவே, ஆளுநர் மாணவர்கள் மத்தியில் கடவுள் சரஸ்வதியின் படத்தை வைத்து வணங்கிவிட்டு படித்தால் அறிவு நிச்சயம் பெருகும் என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+