தொடரும் போதைப்பொருள் கடத்தலும், திமுகவின் தொடர்பும்.. அடுக்கிய அன்புமணி.. பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: சென்னையிலிருந்து இராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ. 70 கோடி மதிப்புள்ள மொத்தம் 6.93 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன், திமுக நிர்வாகியை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் திமுகவை குற்றம்சாட்டி பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "சென்னையிலிருந்து இராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ. 70 கோடி மதிப்புள்ள மொத்தம் 6.93 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப் பொருளை காவல்துறையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணைத் தலைவர் செய்யது இப்ராகிம் என்பவர் உள்ளிட்ட மூவரை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருக்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய செய்யது இப்ராகிம் திமுகவைச் சேர்ந்தவர் தான் என்பதை அக்கட்சியின் தலைமையும் ஒப்புக் கொண்டு, அவரை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கியிருக்கிறது. போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது திமுக நிர்வாகி செய்யது இப்ராகிம். இதற்கு முன் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட போது, அவரது பின்னணியை ஆய்வு செய்தா கட்சியில் சேர்க்க முடியும்? என்று திமுக வினா எழுப்பியது. இப்போது செய்யது இப்ராகிம் என்ற இன்னொரு திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து திமுக என்ன சொல்லப் போகிறது? ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட பிறகும் திமுக நிர்வாகிகளின் சட்டவிரோத செயல்களை திமுக தலைமையும், ஆட்சித் தலைமையும் அனுமதித்திருக்கிறது என்பது தான் இதன் பொருள்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரத்தை பரப்பி அனைத்து வகை சீரழிவையும் ஏற்படுத்தியவர்களுக்கு திமுக அடைக்கலம் கொடுத்திருக்கிறது. போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட நிர்வாகி கைது செய்யப்பட்ட பிறகு அவரை நீக்குவதன் மூலமாக மட்டும் இதிலிருந்து திமுக தப்பித்துக் கொள்ள முடியாது. போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக விளக்கம் அளிக்க வேண்டும்.
இராஜாஜி, ஓமந்துரார், காமராசர், அண்ணா ஆகியோர் கடைபிடித்த கொள்கைகளால் மது என்றால் என்னவென்றே தெரியாத தலைமுறை ஒன்று தமிழ்நாட்டில் உருவானது. ஆனால், மதுவிலக்கை திமுக அரசு ரத்து செய்ததால் 3 தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விட்டன. இப்போது போதைப் பொருள் என்ற பெரும் தீமை தமிழ்நாட்டில் பரவுவதற்கு திமுகவினரே காரணமாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இருந்தும் அதைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தான் குற்றவாளிகளை பிடித்திருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியாவது விழித்துக் கொண்டு போதைப்பொருட்கள் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என்று தமிழ்நாட்டு வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவாகும் நிலை உருவாகும்." இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications