சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரண்டு ரிஷப்சன்கள்.. ஒன்று வி.ஐ.பி.க்களுக்கு.. மற்றொன்று கட்சிக்காரர்களுக்கு.. அன்புமணி இல்ல விழா..!

Google Oneindia Tamil News

சென்னை: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மகள் திருமண வரவேற்பு விழாவையொட்டி கட்சியினருக்கு ஸ்பெஷல் விருந்து அளிக்க உள்ளார்.

சுமார் இரண்டாயிரம் பேருக்கு மேல் அழைப்பிதழ் அனுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், இந்த விருந்தை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கொடுக்கிறார்.

கடந்த வாரம் மிக நெருங்கிய உறவுகள் முன்னிலையில் அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு கொடுத்த அதீத முன்னுரிமை.. தனிமரமாகிறதா அதிமுக? சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு கொடுத்த அதீத முன்னுரிமை.. தனிமரமாகிறதா அதிமுக?

 அன்புமணி மகள்

அன்புமணி மகள்

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா-ஷங்கர்பாலா இணையரின் திருமணம் கடந்த வாரம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மிக எளிய முறையில் நடைபெற்றது. மிக நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு மட்டுமே திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த திருமணத்தையொட்டி சென்னை ஐ.டி.சி.நட்சத்திர விடுதியில் மகள் திருமண வரவேற்பு விழாவை நடத்தினார் அன்புமணி ராமதாஸ்.

முதலமைச்சர்

முதலமைச்சர்

அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய தொழிலதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மட்டும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மட்டும் தான் அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. பேத்தியின் திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை புரிந்து மணமக்களை வாழ்த்திய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ராமதாஸ் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

வரவேற்பு விழா

வரவேற்பு விழா

இந்நிலையில், கட்சிக்காரர்களுக்கும், வன்னியர் சங்கப் பிரமுகர்களுக்கும் ஸ்பெஷல் விருந்தளிக்க விரும்பிய ராமதாஸ் இதற்காக மற்றொரு ரிஷப்ஷன் நிகழ்ச்சியை நடத்த ஆலோசனைக் கூறியிருக்கிறார். அதன்படி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், இரண்டாவது ரிஷப்ஷன் விழா நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

சைவம்- அசைவம்

சைவம்- அசைவம்

இவர்களுக்காக அசைவம், சைவம் என இரண்டு மெனுக்களை தயார் செய்துள்ள அன்புமணி, வந்தவர்கள் மனதார மணமக்களை வாழ்த்தி வயிராற சாப்பிட்டு செல்ல வேண்டும் என்பதற்காக அசைவ உணவுகளில் உள்ள அனைத்து வகைகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார். நேற்று முன் தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், பாமக தலைவர் கோ.க.மணி திருமண வரவேற்பு விழாவுக்காக ஏற்பாடுகளை மகாபலிபுரத்தில் முகாமிட்டு கவனித்து வருகிறார். சமூக இடைவெளியுடன் உணவு சாப்பிடும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Anbumani ramadoss hosting a daughter wedding reception for Pmk executives
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X