ஓமைக்ரான் பரவிய நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
சென்னை: உலக நாடுகளை அச்சுறுத்தும் ஓமைக்ரான் வைரஸ் பரவியுள்ள நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற வகை கொரோனா ஆப்பிரிக்கக் கண்டத்தில் நமிபியா, போஸ்த்துவானா, எஸ்வாதினி, மொசாம்பிக், மலாவி, ஜிம்பாப்வே, செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும், ஆப்பிரிக்காவுக்கு வெளியில் ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் பரவியிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள மேலும் பல நாடுகளிலும் இந்த வகை கொரோனா பரவியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இனிவரும் நாட்களில் சோதனைகள் மூலம் இது உறுதி செய்யப்படலாம்.
உருமாறிய பி.1.1.529 வகை கொரோனாவுக்கு ஓமைக்ரான் என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இது மிகவும் கவலையளிக்கும் கொரோனா வைரஸ் (Variant of Concern) என்று அந்நிறுவனம் வகைப்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவற்றை உலக சுகாதார நிறுவனம் 4 வகைகளாக பிரித்திருக்கிறது. அவற்றில் மிகவும் ஆபத்தான பிரிவாக ஓமைக்ரான் கொரோனாவை உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியிருப்பதிலிருந்தே அதன் தீவிரத் தன்மையை புரிந்து கொள்ள முடியும்.

மிக மிக ஆபத்தானது
இதுவரை மிகவும் ஆபத்தான வைரசாக அறியப்பட்டது டெல்டா வகை தான். தமிழ்நாடு உட்பட இந்தியாவில் இரண்டாவது அலையின் போது கோடிக்கணக்கானவர்களை பாதித்ததுடன், லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது டெல்டா வகை கொரோனா தான். டெல்டா வகை வைரஸ் 15 முறை உருமாற்றம் அடைந்ததால் ஏற்பட்டதாகும். ஆனால், ஓமைக்ரான் வகை வைரஸ் அதை விட இரு மடங்குக்கும், அதாவது 30 முறைக்கும் மேலாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. அதேபோல், மனித செல்களை பற்றுவதற்கான ஓமைக்ரான் வகை கொரோனாவின் கால்கள் (Spike Protein) 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளன.

தடுப்பூசியால் தடுக்க முடியாது
அதிலும் அண்மையில் ஏற்பட்ட மூன்று உருமாற்றங்கள் இந்த வகை வைரஸ் வேகமாக பரவுவதற்கும், மனித உடலின் செல்களில் எளிதாக ஊடுருவதற்கும் வகை செய்கின்றன. அதுமட்டுமின்றி, கடைசியாக ஏற்பட்ட இரு உருமாற்றங்கள் ஓமைக்ரானில் இணைந்து இருப்பதால், இவ்வகை வைரஸ் பரவலை தடுப்பூசியால் எளிதில் தடுக்க முடியாது என்றும், இந்த வகை கொரோனாவைத் தடுக்கும் தடுப்பூசிகளின் திறன் 40% குறைவாகவே இருக்கும் என்றும் இங்கிலாந்து நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி தி டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை இந்தியா உணர வேண்டும்.

ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகரிப்பு
இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் 320% அதிகரித்து இருப்பதும், ஐரோப்பிய நாடுகளில் தினசரித் தொற்று ஜெர்மனியில் 76,000, இங்கிலாந்தில் 50,000 என்ற அளவுக்கு அதிகரித்திருப்பது இதன் தீவிர பரவும் தன்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளன. இரண்டாவது அலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில், இந்திய, தமிழக அரசுகள் ஓமைக்ரான் கொரோனாவின் ஆபத்தை உணர்ந்து அதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Recommended Video

விமானப் போக்குவரத்தை தடை செய்திடுக
அதன் ஒரு கட்டமாக ஓமைக்ரான் தொற்று பரவியுள்ள நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் தினசரி கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து வரும் விமானப் பயணிகளிடம் கொரோனா ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும்; தேவைப்பட்டால் தனிமைப்படுத்துதல் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை 30%க்கும் கீழாக குறைந்து விட்டது. நிலைமையின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தி முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைபிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications