2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி.. நிச்சயம் பாமக பங்கேற்கும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதி
சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அரசு இதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், 2026 இல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெறும் அதில் நிச்சயம் பாமக பங்கேற்கும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஓபிசி தொழிலாளர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம் செய்ய வேண்டும், ஓபிசி பிரிவினருக்கு சிறப்பு பணி நியமன தேர்வை நடத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ரயில்வே ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் உள்ள கடைநிலை ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்த போராட்டம் நடைபெற்றது.
OBC-களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என தொடர்ந்து நாங்கள் போராடி வருகிறோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆழமான கோரிக்கை இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. அதில் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும் என்கிற வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருக்கிறது. அதற்கு ஒரே தீர்வு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து உச்சநீதி மன்றத்தில் நிருபிக்க வேண்டும்.
இல்லையெனில் அதை ரத்து செய்ய வேண்டிய ஒரு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னால் இருந்த முதலமைச்சர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று சொல்லவில்லை. தற்போதையை முதல்வர் தான் இப்படி கூறுகிறார். கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் ICU வில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் இது போன்ற நிலைதான். சட்டம் ஒழுங்கு என்று ஒன்று தமிழ்நாட்டில் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 6 ஆயிரம் கொலை,55 ஆயிரம் கொள்ளை சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து இணையான காவல்துறை என்பதெல்லாம் போய்விட்டது. வன்னியர் சங்க தலைவர் தலையை எடுப்பேன் என ஒரு நபர் மேடையில் பேசுகிறார். ஆனால் அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை கோழையாக உள்ளது.. ஏன் காவல்துறை பயப்படுகிறது?
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அரசு இதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும், அரசு மெத்தனமாக உள்ளது. ஆட்சிக்கு வந்தால் 5 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்களை நாங்கள் நியமனம் செய்வோம் என கூறினார் முதலமைச்சர், ஆனால் செய்தது வெறும் 68 ஆயிரம் அதிலும் 32 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள், அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது.
தெரு தெருவாக தமிழ்நாட்டில் கஞ்சா விற்றுக் கொண்டு இருக்கிறார்கள், அமெரிக்காவில் கிடைக்கும் அனைத்து போதை பொருட்களும் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது, தமிழக முதலமைச்சர் இதை கண்டுக்கொள்வதில்லை, தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க வேண்டும்.
திமுக கொடுத்த 550 வாக்குறுதிகளில் 45 வாக்குறுதிகள் தான் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது, அனைத்து துறைகளிலும் பற்றாக்குறை உள்ளது, இந்தியாவில் 8 மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் கொடுப்போம் என்று அறிவித்து கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், ஆனால் தமிழகத்தில் ஏன் கொடுக்கமுடியவில்லை?
மழை வரும் சமயத்தில் மழைநீர் வெளியேற தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதை விட்டுவிட்டு, அமைச்சர்களும் அதிகாரிகளுடன் படகை தேடுகின்றனர். இதுதான் திராவிட மாடல் அரசா?ஏரிகள், ஆறுகள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யபடுகிறது, ஆனால் தூர் வாரும் பணிகள் நடைபெறுவதில்லை, கொள்ளை தான் அடிக்கின்றனர். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெறும்...அதில் பாமக இடம்பெறும்" என்றார்.
-
திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? முதல்வர் விஜய் முடிவுக்கு அன்புமணி வரவேற்பு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications