திருவண்ணாமலை திணறுது.. கிருஷ்ணகிரி கலங்குது! உடனே நடவடிக்கை தேவை.. தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என தமிழக அரசை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் எதிர்பார்த்த வேகத்தில் கரையைக் கடக்காமல் பல மணி நேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பெய்திருப்பதாகவும், இது கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத மழை என்றும் கூறப்படுகிறது. தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தலில் 32 செ.மீ, மாதம்பூண்டியில் 31 செ.மீ, சேலம் ஏற்காட்டில் 24 செ.மீ மழை கொட்டித்தீர்த்திருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் காட்டாற்று வெள்ளத்தைப் போல ஓடிய மழை நீர் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்களை அடித்துச் சென்றுள்ளன என்பதிலிருந்தே அதன் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும். திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் ஏரி போன்று தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் சரபங்கா ஆற்றிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் கடலூர் வரை தென்பெண்ணை ஆற்றிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பல கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
வரலாறு காணாத மழை பெய்திருப்பது உண்மை தான் என்றாலும், அவற்றை சமாளிக்கும் அளவுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் கட்டமைப்புகளையும் மீறி, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளும், மழை நீரை ஆறுகளுக்கு கொண்டு செல்லும் கால்வாய்களும் தூர்வாரப்படாதது தான். தூர் வாரும் பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசால் ஒதுக்கப்பட்ட நிதி எங்கு சென்றது என்பது யாருக்கும் தெரியவில்லை. பல இடங்களில் கால்வாய்களில் ஓட வேண்டிய மழை நீர் சாலைகளிலும், தெருக்களிலும் ஓடியது தான் அதிக பாதிப்புகளுக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அலட்சியத்தாலும், திறனற்ற செயல்பாடுகளாலும் பேரழிவை உண்டாக்கியுள்ள தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்வதிலும், மீட்புப் பணிகளை மேற்கொள்வதிலும் படுதோல்வி அடைந்து விட்டது. திருவண்ணாமலையில் பாறைகள் உருண்டதால் சேதமடைந்த வீடுகளுக்குள் 7 பேர் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், 18 மணி நேரமாகியும் அவர்கள் மிட்கப்படவில்லை. பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது குறித்த கவலை எதுவும் முதலமைச்சருக்கு இல்லை.
வட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; தேவைப்பட்டால் கூடுதலாக மீட்புக் குழுக்களை அந்த பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட 7 பேரையும் உயிருடன் மீட்க வேண்டும்” என கூறியுள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications