பாமகவில் சூடு கிளப்பிய சுசீலா விவகாரம்.. ராமதாஸுக்கு எல்லா பக்கமும் அடி! அன்புமணி அமைதி காப்பது ஏன்?
சென்னை: மிகவும் பரபரப்பாக பாமக விவகாரம் பொதுவெளியில் பேசப்பட்டு வரும் நிலையில் அமைதி காக்கிறார் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ். சுசிலா விவகாரத்தால் ராமதாஸ் மீது சமூக வலைதளங்களில் அடுக்கடுக்காய் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், தற்போதைக்கு எதுவும் பேசாமல் இருப்பது தான் கட்சிக்கு நல்லது என அறிவுறுத்தியுள்ளார் என்கின்றனர் அன்புமணியின் ஆதரவாளர்கள்.
கடந்த ஆறு மாதங்களாகவே பாமகவில் ஏதாவது ஒரு பிரச்சினை முளைத்துக் கொண்டே இருக்கிறது. அன்புமணி ராமதாஸ் நீக்கத்தில் ஆரம்பித்து தற்போது ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் வரை ஏராளமான பிரச்சினைகளை பாமக பார்த்துவிட்டது. முதன்முதலாக வன்னியர் சங்க மாநாட்டுக்கு முன்னதாகத்தான் அதிரடியைத் துவக்கினார் ராமதாஸ்.
அதற்கு முன் கட்சியின் முகமாக, எதிர்காலமாக முன்னிறுத்தப்பட்டிருந்தார் அன்புமணி ராமதாஸ். இந்த நிலையில் வன்னியர் சங்க மாநாடு நடந்த போது திடீரென செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாகவும் அவரை செயல் தலைவராக நியமிப்பதாகக் கூறி அதிர வைத்தார்.

பாமக அரசியல்
தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திலகபாமா, வடிவேல் ராவணன் உள்ளிட்டோரின் பதவிகளும் பறிக்கப்பட்டன. தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து நீக்கப்பட்டனர். ஆனால் இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என முடிவு செய்த அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவர் நான்தான் எனக் கூறி வந்தார். தொடர்ந்து பொதுக்குழு கூட்டம், மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த பொதுக்குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் என அன்புமணி தனது பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்கு நீதிமன்றம் வரை சென்று தடை கேட்டும் ராமதாஸ் தரப்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பாமக உட்கட்சி மோதல்
இந்த நிலையில் பாமகவில் புயலைக் கிளப்பி இருக்கிறது சுசிலா விவகாரம். தன்னிடம் செவிலியராகப் பணியாற்றியவரை ராமதாஸ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அவர் சுசீலாவுடன் இணைந்து ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாடியதாகப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இத்தனை ஆண்டுகள் ரகசியமாக இருந்த இந்த உறவு திடீரென பொதுவெளிக்கு வந்திருக்கும் நிலையில் ராமதாஸை மிகக் கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
அன்புமணி அமைதி
அதுமட்டுமல்லாமல் ராமதாஸின் அரசியல் வாழ்வும் இதனால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அரசியல் வாழ்வு தவிர்த்து ராமதாஸ் எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காத, நிலையில் அன்புமணியோ, அன்புமணி ஆதரவு நிர்வாகிகளும் இதுவரை இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசவில்லை. அதாவது ஏற்கனவே பாமகவில் ராமதாஸ் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்த போதும் அன்புமணி அமைதியாகவே இருந்தார். கட்சியில் பலரும் ராமதாஸுக்கு எதிராக பேச முற்பட்டபோதும் அன்புமணி அவ்வாறு பேசக் கூடாது என அதட்டி வைத்திருந்தார்.
ராமதாஸ் சர்ச்சை
தற்போதும் அதே நிலையே தொடர்கிறது. இந்நிலையில் தான் வயதான காலத்தில் யாருடைய தூண்டுதலின்பேரில்தான் ராமதாஸ் அவ்வாறு நடந்து கொள்கிறார். அதனால் அவரைப் பற்றி பேச வேண்டாம் என தனது நிர்வாகிகளுக்கு தனது ஆதரவு நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார். மேலும் நடப்பது நடக்கட்டும், இப்போதைக்கு அமைதியாய் இருப்பது நல்லது எனவும் நிர்வாகிகளை சமாதானம் செய்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications