எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைச்சரா? என்.எல்.சி. முகவரா? பூராம் பொய்! பட்டாளி மக்கள் கட்சி பாய்ச்சல்!

2 ஆண்டுகளில் தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ள என்.எல்.சி.க்காக மக்களை மிரட்டி ஏன் நிலங்களை பறிக்க வேண்டும்? என பாமக கேள்வி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைச்சரா? இல்லை என்.எல்.சி. முகவரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அப்பட்டமான பொய்யை கூறியிருக்கிறார் என அன்புமணி சாடியுள்ளார்.

அமைச்சருக்கு எதிராக அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள பதிவு வருமாறு;

நெய்வேலி பழுப்பு நிலக்கரி

நெய்வேலி பழுப்பு நிலக்கரி

என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு சுரங்கங்கள் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி பறித்திருக்கும் நிலையில், தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும், இனி நிலங்களை கையகப்படுத்தப் போவதில்லை என்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய்யாகும்.

அப்பட்டமான பொய்

அப்பட்டமான பொய்

என்.எல்.சிக்கு நிலம் எடுக்க கடலூர் மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ள முடியாத மாவட்ட நிர்வாகம், அனைத்து நடவடிக்கைகளையும் திரைமறைவில் செய்து வருகிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலையோ, கூட்டுறவு சங்கத்தின் மூலமான வேலையோ வழங்க என்.எல்.சி தயாராக இல்லை எனும் நிலையில், தினக்கூலி வேலை வழங்கி மக்களை மாவட்ட நிர்வாகம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சி ரத்து

நிகழ்ச்சி ரத்து

அதற்காக ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நேற்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறவிருந்த நிலையில், அதுபற்றி நீதி கேட்பதற்காக பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கடலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர்கள் தலைமையில் ஏராளமானவர்கள் அங்கு சென்றனர். இதையறிந்த அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரகசியமாக செய்து முடித்தனர்.

திரைமறைவில் செய்வது ஏன்?

திரைமறைவில் செய்வது ஏன்?

அங்கும் சென்ற பா.ம.க. குழுவினர், என்.எல்.சிக்கு நிலம் எடுக்கும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் அனைத்தையும் திரைமறைவில் செய்வது ஏன்? என்று வினா எழுப்பினார்கள். எந்த வினாவிற்கும் அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் நேரடியாக விடையளிக்கவில்லை. வெளியில் செய்தியாளர்களிடம் பேசும் போது மட்டும், என்.எல்.சிக்காக 2500 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தியிருப்பதாகவும், இனி நிலம் கையகப்படுத்தப் போவதில்லை என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். அமைச்சரின் பதில் அப்பட்டமான பொய்; மக்களை ஏமாற்றும் வேலை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை.

 மக்களை ஏமாற்றும் வேலை

மக்களை ஏமாற்றும் வேலை

மூன்றாவது சுரங்கத்திற்காக கொளப்பாக்கம், அரசகுழி, கோ.ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, ஓட்டிமேடு, கோட்டி முளை, சிறுவரப்பூர், க.புத்தூர், சாத்தபாடி, தர்மநல்லூர் உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 4850 ஹெக்டேர், அதாவது 12,125 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த கடந்த 2018&ஆம் ஆண்டிலேயே என்.எல்.சியும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்தனவா, இல்லையா? அதைக் கண்டித்து எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்ட பிறகு தான் அத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

கருப்பு சட்டை அணிந்து

கருப்பு சட்டை அணிந்து


அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த இதே பன்னீர்செல்வம் நிலம் எடுப்பதை எதிர்த்து 2017-&ஆம் ஆண்டு பிப்ரவரி 7&ஆம் நாள் கம்மாபுரத்தில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாநிலை போராட்டம் நடத்தினாரா, இல்லையா? அப்போது ''மூன்றாவது சுரங்கத்திற்கு நிலம் கொடுக்க மக்கள் தயாராக இல்லை; அதனால் நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம்'' என்று முழங்கினாரா, இல்லையா? அப்போது அப்படி முழங்கிவிட்டு, இப்போது என்.எல்.சியின் முகவராக மாறி, நிலம் எடுக்கும் திட்டமில்லை என்று கூறுவது பொய் இல்லையா?

 12 கிராமங்களில்

12 கிராமங்களில்

கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை சுற்றியுள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய 3 வட்டங்களில் உள்ள புத்தூர், ஆட்கொண்டநத்தம், மோவூர், ஓமம்புலியூர், தவர்த்தாம்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களில் மிக அதிக அளவில் உள்ள நிலக்கரி வளத்தை தோண்டி எடுப்பதற்கான வீராணம் நிலக்கரி சுரங்கத்திற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இன்றைய தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறதா, இல்லையா? இனி நிலமே எடுக்கப்போவதில்லை என்றால் எதற்காக இந்த ஆய்வை அனுமதிக்க வேண்டும்?

துடிப்பது ஏன்?

துடிப்பது ஏன்?

என்.எல்.சி நிறுவனத்திற்காக 1985&ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட 10,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் இன்று வரை பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த நிலத்திலிருந்து இன்னும் 40 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரியை எடுக்க முடியும். அவ்வாறு இருக்கும் போது உழைக்கும் பாட்டாளி மக்களின் நிலங்களை கையகப்படுத்த மீண்டும், மீண்டும் அமைச்சரும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் துடிப்பது ஏன்?

ஏன் மக்களை மிரட்டி?

ஏன் மக்களை மிரட்டி?

எந்த வகையில் பார்த்தாலும் என்.எல்.சிக்கு நிலம் தேவையில்லை. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் பணமாக்குதல் (National Monetisation Pipeline) திட்டத்தின் கீழ் என்.எல்.சி. நிறுவனம், அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது 2025ஆம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்பனை செய்யப்படவிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு ஆண்டுகளில் தனியாருக்கு விற்கப்படவிருக்கும் என்.எல்.சிக்காக ஏன் மக்களை மிரட்டி நிலங்களை பறிக்க வேண்டும்?

அரசின் பணியா?

அரசின் பணியா?

தமிழ்நாட்டில் 2040&ஆம் ஆண்டுக்குள் நிகரச் சுழிய கரிம உமிழ்வு (Net Zero Carbon Emissions) நிலை ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அப்படியானால், என்.எல்.சி சுரங்கங்கள் விரிவுபடுத்தப்படக்கூடாது; மாறாக படிப்படியாக மூடப்பட வேண்டும். மூடப்பட வேண்டிய நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவது தான் மக்கள் நலன் காக்கும் அரசின் பணியா?

1000 அடிக்கும் கீழே

1000 அடிக்கும் கீழே

என்.எல்.சியால் கடலூர் மாவட்டத்திற்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு காலத்தில் 8 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இப்போது 1000 அடிக்கும் கீழே சென்று விட்டது. வெள்ளக்காலங்களில் என்.எல்.சி. நிறுவனம் எந்த சமூகப்பொறுப்பும் இல்லாமல் அதன் சுரங்கங்களில் உள்ள நீரை ராட்சத குழாய்கள் மூலம் மிகப்பெரிய அளவில் வெளியேற்றுகிறது. அதனால், வெள்ளம் அதிகரித்து, மிக அதிக அளவில் உயிர் சேதமும், பயிர் சேதமும் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிறுவனத்திற்கு, சொந்த வேளாண் மக்களுக்கு துரோகம் செய்து விட்டு தமிழ்நாடு அரசு நிலம் எடுத்துத் தர வேண்டுமா?

எத்தகைய தியாகத்துக்கும் தயார்

எத்தகைய தியாகத்துக்கும் தயார்

கடலூர் மாவட்ட மக்களை மிரட்டி நிலங்களை பறித்து விட்டதாக கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர்களால் அங்கு எதையும் செய்ய முடியாது. உழவர்களுக்கு சொந்தமான அந்த நிலங்கள் பசுமைபூமியாகவே தொடர வேண்டும்; அங்கு விவசாயம் மட்டுமே நீடிக்க வேண்டும். மாறாக, சுற்றுச்சூழலை கெடுக்கும் கருமை பூமியாக மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது.

 இலக்குகளை எட்டும் வரை

இலக்குகளை எட்டும் வரை

கடலூர் மாவட்டத்தை பாழ்படுத்தி வரும் என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் அவர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த இலக்குகளை எட்டும் வரை பா.ம.க. எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+