மேக்கப் போட்டு பியூட்டி காட்டிய பாட்டி.. 3 பேரை திருமணம் செய்து மோசடி.. கைது செய்த சென்னை போலீஸ் !!
கவர்ச்சி காட்டி நபரை 3வதாக திருமணம் செய்த பெண் கைதாகி உள்ளார்
சென்னை: பெண்களை தெய்வமாக மதிக்கும் இதே தாய் திருநாட்டில் தான், சில பெண்கள், தங்கள் மானத்தை தாங்களே வாங்கி கொள்கிறார்கள்.. தனிமனித ஒழுக்க சீர்கேடுகளே இதற்கெல்லாம் காரணமாகவும் அமைந்து விடுகிறது.
Recommended Video
சென்னை, ஆவடி, முத்தாப்புதுப்பேட்டையை சேர்ந்தவர் கோவர்தனன்.. 47 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. ஒரு மகனும் இருக்கிறார்.. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.
இதனால், கோவர்த்தனனின் அம்மா இந்திராணி, மிகவும் கவலைக்கு உள்ளானார்.. மகன் வாழ்க்கை இப்படி பாழாய் போகிறதே, பெற்ற மகனுடன் எத்தனை காலம் தனியாக வாழ முடியும்? என்று நினைத்து, பிள்ளைக்கு 2வது கல்யாணம் செய்யவும் முடிவு செய்தார்.

சந்தியா
அதனால், தகவல் மையத்தில், நல்ல பெண்ணாக தேடினார்.. அப்போதுதான், சந்தியா என்ற பெண்ணை பார்த்தனர்.. ஆந்திரா, சித்தூர், புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்தியா.. சற்று உடல் பருமனாக இருந்தாலும், மகனுக்கு பொருத்தமாக இருப்பதாக நினைத்தனர்.. சந்தியாவை பார்த்துமே அவர் அழகில் மயங்கினார் கோவர்த்தன்.. சந்தியாவும், கோவர்த்தனை திருமணம் செய்ய முழு சம்மதம் சொன்னார்.. அதன்படி, அக்டோபர் மாதம், 25ம் தேதி, திருநின்றவூர் பகுதியில், ஒரு மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடந்தது.

சர்ட்டிபிகேட்கள்
திருமணத்தை அன்றைய தினமே முறைப்படி பதிவு செய்ய முடிவானது.. அதனால், சந்தியாவின் ஆதார் கார்டு, கல்வி சான்றிதழ்களை கோவர்த்தன் கேட்டார்... ஆனால், சந்தியாவோ, இப்படி திடீரென கேட்டால் எப்படி? தன்னிடம் எதுவும் தயாராக இல்லை என்றும், இன்னொரு நாள் பதிந்து கொள்ளலாம் என்றும் சொல்லி உள்ளார்.. இதற்கு பிறகு தம்பதி இருவரும் குடும்பம் நடத்த ஆரம்பித்தனர்.. கோவர்த்தனின் மாத சம்பளம் முழுக்க தனக்கே வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தார் சந்தியா.. இதனால் கோவர்த்தனும் சம்பளத்தை சந்தியாவிடம் தந்தார்..

அட்ரஸ்
பிறகு, சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி எழுதி தர வேண்டும் என்று சந்தியா பிடிவாதமாக கேட்டார். அப்போது தான் , கோவர்தனுக்கு லேசாக சந்தேகம் எழுந்தது. திருமணத்தையே இன்னும் முறையாக பதிவு செய்யாதபோது, அதற்கான ஆதாரங்களையும் இதுவரை தன்னிடம் காட்டாததால், நேரடியாகவே சந்தியா கொடுத்த அட்ரஸுக்கு கிளம்பி சென்றார்.. ஆந்திரா அட்ரஸை தந்திருந்தார் சந்தியா.. அந்த அட்ரஸில் போய் பார்த்து, வீட்டில் இருந்த ரவி என்பவரிடம் சந்தியா பற்றி விசாரித்தார்..

ரவி அதிர்ச்சி
அந்த ரவிதான் சந்தியாவின் கணவனாம்.. விவகாரத்து எதுவும் ஆகவில்லை.. ஒன்றாகத்தான் வசித்து வந்துள்ளனர்.. முதல் கணவனே இந்த ரவிதான்.. இரண்டு பெண் பிள்ளைகளும் அங்கு இருப்பதை பார்த்து, நிலைகுலைந்து போனார் கோவர்த்தனன். அதுமட்டுமல்ல, அங்கே சந்தியாவின் போட்டோவை பார்த்து அதற்கு மேல் ஆடிப்போய்விட்டார்.. தலை எல்லாம் நரைத்து காணப்பட்டது..

கவர்ச்சி - அழகு
முதிர்ந்த தோற்றத்தில் சந்தியா இருந்தார்.. அப்போதுதான் ரவியிடம் சந்தியா வயது என்னவென்று கேட்டார்.. 50 என்று பதில் வந்தது.. இப்போது கோவர்த்தனுக்கு பேச்சே வரவில்லை.. தலைக்கு டை அடித்து, மேக்கப் போட்டு இளம்வயது பெண்ணாக தன்னை காட்டி கொண்டு வந்ததை நினைத்து கண்கள் கலங்கியது 47 வயது கோவர்த்தனுக்கு.. நடந்ததை எல்லாம், தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து சொல்லி உள்ளார் கோவர்த்தனன்.. தங்களை மோசடி செய்ததை நினைத்து, ஆத்திரமடைந்த இந்திராணி, ஆவடி மகளிர் போலீசில் புகார் தந்தார்..

சந்தியா சிக்கினார்
போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தியாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்... இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. இந்த புகார் குறித்து விசாரிக்க, சந்தியாவிற்கு மூன்று முறை, ஆவடி மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.. ஆனால் அவர் சம்மனை கொஞ்சம்கூட மதிக்கவில்லை.. இதையடுத்து, கடந்த ஜுன் 28ம் தேதி, சித்தூர் சென்று கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.. போலீஸ் விசாரணையின்போது, மேலும் பல தகவல்கள் வெளியாகின. 2010லேயே கணவர் ரவியுடன் சந்தியா சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

சுப்பிரமணி
சித்தூரில் இவரது அம்மா வீடு உள்ளதால், அங்கேயே தங்கியிருந்தார். அப்போதுதான், சுப்பிரமணி என்பவரை 2வதாக திருமணம் செய்துள்ளார்... கடந்த ஜுன் மாதம் வரை சுப்ரமணியுடன் வாழ்ந்து வந்துள்ளார் சந்தியா. பிறகுதான், 3வதாக கோவர்த்தனுக்கு குறி வைத்துள்ளார். சுகுணா, சந்தியா, சுகன்யா என்று 3 பெயர்களாம். இதில் கொடுமை என்னவென்றால், சந்தியாவின் 2 மகள்களுக்குமே திருமணம் ஆகிவிட்டது.. அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள்.. பேரன், பேத்தி எடுத்துவிட்டு, 4வது கல்யாணத்துக்கு சந்தியா, ரெடியாகி கொண்டிருந்துள்ளார்.. ஆனால், அதற்குள் சந்தியாவை அள்ளிக் கொண்டு போய் ஜெயிலில் அடைத்தது மகளிர் போலீஸ்..!
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications