சென்னை ஆவடி அருகே விபத்தில் பாமக பிரமுகர் கார்த்திகேயன் பலி- தனியார் பேருந்து தீ வைத்து எரிப்பு
சென்னை: சென்னையை அடுத்த ஆவடி அழுதூர்மேட்டில் விபத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன் பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விபத்துக்கு காரணமான தனியார் பேருந்தை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அழுதூர்மேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் மீன் வியாபாரம் செய்து வந்தார். பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.
Recommended Video

இந்த நிலையில் ஆவடி அருகே அணைக்கட்டுசேரி பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் கார்த்திகேயன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பேருந்து கார்த்திகேயனின் இரு சக்கர வாகன மீது மோதியது.
மேலும் பேருந்தின் சக்கரம் கார்த்திகேயன் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கார்த்திகேயனின் வீட்டுக்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது.

தீ வைத்து எரித்த பொதுமக்கள்
இதனை கண்ட அப்பகுதியினர் மற்றும் அவரது உறவினர்கள் ஆத்திரத்தில் விபத்துக்கு காரணமான பேருந்தை அடித்து நொறுக்கியதோடு தீயிட்டு கொளுத்தினர்.
|
பேருந்து கருகியது
தீ பேருந்து முழுதும் மளமளவென பரவி பேருந்து முழுவதும் கருகியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர் ஆனால் அதற்குள் பேருந்து கருகி நாசமானது.

அதிரடிப்படை குவிப்பு
அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அசம்பாவிதங்களை தவிர்க்க அதிரடிப்படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து பட்டாபிராம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதேபோல் விபத்து சம்பவம் குறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
|
ஜி.கே.மணி இரங்கல்
இதனிடையே கார்த்திகேயன் மறைவுக்கு பாமக தலைவர் ஜி.கே. மணி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணைத் தலைவர் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அடுத்துள்ள அழுதூர்மேடு கார்த்திகேயன் விபத்தில் இறந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தைதெரிவித்துக்கொள்கிறோம் என பதிவு செய்துள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications