மன்னிப்பு கேட்டாரா அண்ணா? அண்ணாமலைக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சுளீர் பதிலடி! பரபர எக்ஸ் ஸ்பேஸ்
சென்னை: முத்துராமலிங்க தேவரிடம், அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதால் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துள்ளது. இந்த விஷயத்தில் தொடர்ந்து ஆர்எஸ் பாரதி தவிர்த்து, திமுக பெரிய தலைவர்கள் அமைதி காத்து வந்த நிலையில் முதல் முதலாக முதல்வர் ஸ்டாலின் அண்ணாமலைக்கு எக்ஸ் ஸ்பேஸ் (ட்விட்டர் ஸ்பேஸ்) உரையாடலில் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக சார்பில் திராவிட மாதம் என்பது செப்டம்பரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக திமுக திராவிட மாத கொண்டாட்டத்தை கொண்டாடி வந்தது.

திமுக ஐடி விங்க் சார்பில் ஏற்படுத்தப்பட்ட எக்ஸ் ஸ்பேஸ் (முன்பு ட்விட்டர் ஸ்பேஸ்) கலந்துரையாடலில் திமுக தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி வந்தனர்.
இந்நிலையில் தான் திராவிட மாத கொண்டாட்டத்தின் இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் ஸ்பேஸில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ட்விட்டர் உள்பட அனைத்து சமூக வலைதளங்களையும் கொள்கையை பரப்பும் கருவியாக பயன்படுத்த வேண்டும். மக்களை திசைதிருப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
நான் கூட ‛ஸ்பிக்கிங் பார் இந்தியா' என ‛ப்ரோட்காஸ்ட்' தொடங்கி உள்ளேன். இதில் 2 நிகழ்ச்சி முடிந்துள்ளது. தெலுங்கு, மலையாளம், இந்தி என மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. வலைதள பேச்சு என்பது 10 முதல் 14 பொதுக்கூட்டங்களுக்கு சமமானதாக உள்ளது. வலைதளங்களில் அதிமுக பாஜக பொய் செய்திகளை பரப்புவதற்காகவே வேலைக்கும், கூலிக்கும் ஆட்களை வைத்துள்ளனர். அதிமுகவுக்கு கொள்கை இல்லை. கொள்கை சார்ந்த விஷயம் இல்லை.
பாஜகவை பொறுத்தளவில் பிரித்தாளும் அரசியல் செய்கிறது. அவர்களிடம் சாதனை என சொல்ல எதுவும் இல்லை. முக்கிய பிரச்சினைகளை தவிர்த்துவிட்டு பிற விஷயங்களை பேசி அதையே பிரச்சினையாக்குவார்கள். வதந்தி பரப்புவார்கள். இதுதான் அவர்கள் அரசியல். அறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவரிடம் மன்னிப்பு கேட்டதாக சொன்னார்கள். ஆனால் இந்து நாளிதழ் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தாங்கள் செய்தி வெளியிடவில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டது. மருதமலை கோவிலுக்கு திமுக அரசு மின் இணைப்பு தரவில்லை என கூறினார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வரும் 5 ஆண்டுகளுக்கு முன்பே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தமட்டில் அனைவரும் பொய் சொல்கின்றனர். பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்பட பலரும் நாடாளுமன்றத்தில் பொய்களை பேசி வருகின்றனர்.
நாம் அனைத்துக்கும் பதில் சொல்லி கொள்ள வேண்டி இருக்க முடியுமா. கள்ள கூட்டணியில் உள்ள கூட்டணியில் உள்ள பரப்பும் பொய்களுக்கு ஆயுள் குறைவு. நமது கொள்கைக்கு ஆயுள் அதிகம். இதனால் 6வது முறையாக ஆளும் வாய்ப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தால் 40ம் நமதே நாடு நமதே என்றாகி விடும்'' என்றார்.
-
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
நீங்க நல்லா இருக்கோனும்..பார்ட்டி ஃபண்டை கட் செய்த விஜய்! குஷியில் வீடுகட்டுவோர்..ராடாரில் ஆபீசர்ஸ் -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம்












Click it and Unblock the Notifications