கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த விரைவில் அட்டவணை - அண்ணா பல்கலைக்கழகம்
இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமெஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை: யுஜிசி வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணை, ஆன்லைன் மூலம் தேர்வா அல்லது நேரடியாக தேர்வா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகள் தவிர, பிற ஆண்டு செமெஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி தேர்வுகள் ரத்தாகி, மாணவர்களின் ரிசல்ட்களும் வெளியிடப்பட்டன. பாடம் நடத்தாமல் இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் எப்படி தேர்வு எழுத முடியும் என கேள்விகள் எழுந்த நிலையில், 8 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.

கொரோனா அச்சுறுத்தலால் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தாததால் செமெஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வை ரத்து செய்ய யுஜிசி மறுப்பு தெரிவித்து விட்டது. இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்வு நடத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்ட நீதிபதிகள் மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க கூடாது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யுஜிசி வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணை, ஆன்லைன் மூலம் தேர்வா அல்லது நேரடியாக தேர்வா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications