Anna University Case: அந்த 11 பிரிவுகள்தான் முக்கியம்.. பக்காவாக மூவ் செய்த போலீஸ்.. ஞானசேகரன் மாட்ட காரணமே இதுதான்!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார்.
குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கம், கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. எனக்கு வயதான, உடல்நலன் சரி இல்லாத தாயார் உள்ளார். அப்பா இல்லை. குடும்ப சூழலை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என ஞானசேகரன் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு மகளிர் நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஞானசேகரன். தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அது என்ன 11 பிரிவுகள்?
11 குற்றச்சாட்டுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கம், கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி பேட்டி அளித்துள்ளார்.
வழக்கின் தொடக்கத்தில் ஞானசேகரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே 4 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பிரிவுகள் பின்னர் சேர்க்கப்பட்டன. அதன்பின் மீண்டும் 4 பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டன. இப்படி மொத்தமாக 12 பிரிவுகள் கீழ் வழக்கு போடப்பட்டது. அதன்பின்னர் கடந்த பிப்ரவரி 24 அன்று சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 3 மாதங்களில் வழக்கே முடிந்துவிட்டது.
ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 12 பிரிவுகள் குறிப்பிடப்பட்டு.
சட்ட விரோதமாக ஒருவரை தடுத்து வைத்தல்,
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை
மிரட்டி நிர்வாணப்படுத்துதல்
தொழில்நுட்ப சட்டம்
ஆதாரங்களை அழித்தல்
கல்லூரி மாணவியை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பது
புகைப்படம் எடுத்து வெளியிடல்
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல் போன்ற குற்றங்களின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு. இதில்தான் 11 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபணம் ஆகி உள்ளது. அதனுடைய தண்டனை விவரங்கள் ஜூன் 2ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 12 பிரிவுகளும் கடுமையான சென்சிடிவ் பிரிவுகள் ஆகும், இந்த பிரிவுகளை போலீசார் பதிவு செய்தது ஞானசேகரனுக்கு எதிராக திரும்பியது. இதனால் அவருக்கு அதிக அளவில் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
ஞானசேகரன் மீது கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து 20 வழக்குகள் உள்ளது. எல்லா வழக்குகளும் திருட்டு சம்பந்தமான வழக்குகள். பெண்களை துன்புறுத்தியதாகவோ, ரவுடியிசம் செய்ததாகவோ வழக்கு எதுவும் இதற்கு இல்லை. இதுவரை பெண்கள் இந்த நபரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற புகார் இதற்கு முன்பு வரவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த முறை பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு உள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications