'அன்னக்கிளியே சொந்தமில்லை'.. இளையராஜாவிற்கு எதிரான ஒற்றை வாதம்.. கோர்ட்டில் சரிகம சாதித்தது எப்படி?
சென்னை: "அன்னக்கிளியே சொந்தமில்லை" என்று கூறி இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்.. உண்மையில் இளையராஜா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன... 134 படங்களின் உரிமை இளையராஜாவின் கையைவிட்டு போய்விட்டதா... நீதிமன்றத்தில் சரிகம சாதித்தது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்த ஊர் முழுக்க இவரது பாடல்களை யாரும் பாடக் கூடாது என பணம் கேட்டதால் இவருக்கு இவருடைய பாடல்கள் சொந்தமில்லை என ஒருவன் பணம் கேட்கிறார். வாழ்க்கை ஒரு வட்டம் சார் என்று ஒரு நெட்டிசன் விமர்சித்துள்ளார். இன்னும் சில நெட்டிசன்களோ இயக்குனர் நடிகர் நடிகை இசையமைப்பாளர் யாராக இருந்தாலும் ஒரு படத்தில் வேலை செய்து சம்பளம் வாங்கிவிட்டால் பிறகு அந்த படம் தயாரிப்பாளருக்கு சொந்தம் இதில் மற்றவர் உரிமை கோர முடியாது என்று கூறி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் இளையராஜாவை நெட்டிசன்கள் கிண்டல் செய்வதையும், விமர்சனம் செய்வதையும் பார்க்க முடிகிறது. ஆனால் இது இறுதி தீர்ப்பு அல்ல.. நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு என்கிறார்கள் இளையராஜா ஆதரவு நெட்டிசன்கள்.. உண்மையில் இளையராஜா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன... 134 படங்களின் உரிமை இளையராஜாவின் கையைவிட்டு போய்விட்டதா என்பதை பார்ப்போம்.
இளையராஜா பாடிய பாடல்கள்
1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் 900 பாடல்களை, இளையராஜா பயன்படுத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இசைஞானி இளையராஜா அன்னக்கிளி தொடங்கி சில ஆண்டுக்கு முன்பு வந்த விடுதலை வரை ஆயிரக்கணக்கான படங்களின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
காப்பி ரைட்ஸ் சர்ச்சை
இளையராஜா ஆரம்ப காலங்களில் இசையமைத்த பாடல்களின் காப்பி ரைட்ஸ் தொடர்பாக சர்ச்சை நிலவி வருகிறது. பாடல்களை இசையமைத்த தனக்கே அதனை விற்கும் உரிமை உள்ளதாக கூறி வருகிறார். அதேநேரம் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் இசை நிறுவனங்களுக்கு விற்றுவிட்டார்கள். அந்த இசை நிறுவனங்கள் இளையராஜா பாடிய பாடல்கள் தங்களுக்கு சொந்தம் என்று வாதிட்டு வருகின்றன.
சரிகம வழக்கு
அப்படித்தான் தனக்கு சொந்தம் என்று பிரபல இசை நிறுவனமான 'சரிகம'இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் சரிகம தாக்கல் செய்த மனுவில், "1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் வெளியான 134 திரைப்படங்களின் இசை உரிமைகளை, அந்தந்த தயாரிப்பாளர்களிடம் இருந்து எங்களிடம் விற்றுள்ளார்கள். அதற்காக பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளோம். எங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளது" என்று கூறியிருந்தது.
இளையராஜா அறிவிப்பு
ஆனால், கடந்த ஜனவரி மாதம் இளையராஜா தரப்பில் அனுப்பப்பட்ட சட்டப்பூர்வ அறிவிப்பில், படைப்பாளர் என்ற முறையில் பாடல்கள் மீதான முழு உரிமையும் தனக்கே இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விசாரித்து உரிய நீதி பெற்றுத்தரவேண்டும்" என்று கூறியிருந்தார். இதனிடையே இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடெலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரிகம நிறுவனம், "இளையராஜா தனது பாடல்களை அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோசாவ்ன் போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றிப் பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளார்.
ஒற்றை வாதம்
ஆனால் 1957-ம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டத்தின்படி, ஒரு திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட இசையில், ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படாவிட்டால், அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் ஆவார். அதன் அடிப்படையில், தயாரிப்பாளர்களிடம் இருந்து தாங்கள் முறைப்படி உரிமங்களை பெருந்தொகை கொடுத்து பெற்றிருக்கிறோம். எனவே, இளையராஜாவின் அனுமதி, எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உலகளாவிய மற்றும் நிரந்தர பதிப்புரிமை ஒப்பந்தத்தை மீறும் செயல் ஆகும்(ஆதாரங்களை சமர்பித்தது)" இவ்வாறு கூறியது.
டெல்லி நீதிமன்றம் தடை
இருதரப்பு வாதத்தையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடெலா, இளையராஜா சரிகம நிறுவனம் குறிப்பிடும் பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிப்பது சரேகாமா நிறுவனத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்றார். அத்துடன் சரிகம உரிமை கோரும் 134 படங்களில் இடம்பெற்றுள்ள இசை மற்றும் பாடல்களைப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு அனுமதி அளிக்கவோ இளையராஜாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது." என்றார்.
அன்னக்கிளி, 16 வயதினிலே
எனினும் இந்த வழக்கு ஒரு இடைக்காலத் தடை நிலையில் உள்ளது. இளையராஜா தனது தரப்பு பதிலைத் தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 2026-ல் நடைபெற போகிறது. எனினும் இளையராஜா நீதிமன்ற தடை இருக்கும் வரை இனி பயன்படுத்த முடியாத சில முக்கியப் படங்கள், அன்னக்கிளி (அவரது முதல் படம்), 16 வயதினிலே, முள்ளும் மலரும், நெற்றிக்கண், ராஜ பார்வை, மூடுபனி (குறிப்பாக 'என் இனிய பொன் நிலாவே' பாடல் குறித்துத் தனியாகவும் வழக்கு நடந்துள்ளது) போன்ற பல்வேறு படங்களின் பாடல்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது தற்காலிகம் மட்டுமே... டெல்லி நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்தால் தான் நிலைமை தெரிய வரும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications