மீண்டும் மீண்டும் அதையே சொல்லும் அண்ணாமலை... பாஜக 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துவிட்டதாம்!
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துவிட்டதாக மீண்டும் கூறி இருக்கிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் அண்மையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி வார்டுகளில் பாஜக 22, நகராட்சி வார்டுகளில் 56, பேரூராட்சி வார்டுகளில் 230 இடங்களில் பாஜக வென்றுள்ளது.

குமரி மாவட்டத்தில் பாஜக
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பாஜக டெபாசிட்டை கூட பறிகொடுத்துள்ளது. ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துவிட்டது என கூறி வருகிறார்.

3-வது பெரிய கட்சி காங்.
தேர்தல் ஆணைய புள்ளி விவரங்களின்படியே காங்கிரஸ் கட்சி மாநகராட்சி வார்டுகளில் 73, நகராட்சி வார்டுகளில் 151, பேரூராட்சி வார்டுகளில் 368 இடங்களைக் கைப்பற்றி 3-வது கட்சியாக உள்ளது. இதனால் அண்ணாமலையின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மறுப்பு தெரிவித்து வருகிறார்.

சென்னையில் ராகுல்
இந்நிலையில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் எனும் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் பாஜக தொடர்ந்து கனவு காணலாம்.. ஆனால் பாஜகவை எப்படி களத்தில் எதிர்கொள்வது என்பது எங்களுக்கு தெரியும் எனவும் கூறியிருந்தார் ராகுல் காந்தி.

அண்ணாமலை விளக்கம்
இதற்கு உடனே பதிலளித்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரம், 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸில் நிலைப்பாடுகளை விமர்சித்துள்ளார். அதேபோல் சத்தியமூர்த்தி பவனில் நாற்காலிக்காக நடந்த சண்டையையும் குறிப்பிட்டு அதனை முதலில் சரிசெய்யுங்கள் எனவும் கிண்டலடித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றத்தில் தமிழகத்தை ஒருபோதும் பாஜகவால் ஆளவே முடியாது என்கிற ராகுல் காந்தியின் பேச்சை குறிப்பிட்டு, உங்களுக்கு மிக்க நன்றி.. இப்போது தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துவிட்டது என கூறியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3%-க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ள நிலையிலும் கன்னியாகுமரி மாவட்ட கட்சியாக பாஜக சுருங்கியுள்ள நிலையிலும் மீண்டும் மீண்டும் 3-வது பெரிய கட்சி பாஜக என அண்ணாமலை கூறியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications