திமுகவுக்கு எதிரான போலீஸ் நான்... பழைய அட்ஜஸ்ட்மெண்ட் அரசியல்வாதி இல்லை: அண்ணாமலை 'பொளேர்’ பேட்டி
சென்னை: திமுகவுக்கு எதிராக நான் போலீஸ்காரனைப் போல செயல்படுவதால் சில விசயங்களை செய்ய முடிகிறது; நான் ஒன்றும் பழைய அட்ஜஸ்ட்மெண்ட் அரசியல்வாதி அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு இன்று அண்ணாமலை அளித்த பேட்டி: தேர்தல் நாளன்று குமரி முதல் சென்னை வரை அலங்கோலம், அராஜகம் செய்தனர் திமுகவினர். வாக்குச் சாவடியின் உள்ளேயே பணப் பட்டுவாடா செய்ததுடன் , கொரோனா வாக்காளர்களுக்கான நேரத்தில் வாக்குச்சாவடியை பூட்டி வைத்து சிசிடிவியை அணைத்து கள்ள வாக்கு செலுத்தியுள்ளனர் திமுகவினர். பாஜகவினர் பல இடத்தில் தாக்கப்பட்டுள்ளனர், திருவண்ணாமலை, மதுரை, திருமங்கலம் போன்ற இடங்களில் பாஜக நிர்வாகிகளும் வேட்பாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
கோவை மற்றும் சென்னையில் அதிக வன்முறை நடந்துள்ளது. கோவை 63- வது வார்டுக்கு கரூரை சேர்ந்த திமுகவினர் வாக்களிக்க வந்துள்ளனர். அவர்களை பாஜகவினர் சிறைபிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். சென்னை வார்டு 88-ல் திமுகவினர் கள்ள வாக்கு செலுத்தினர். வார்டு 141-ல் தூர்தர்சன் செய்தியாளர் மீது தாக்குதல் நடந்துள்ளது. பெசன்ட் நகரில் திமுகவினரால் வாக்குப் பதிவு எந்திரம் உடைக்கப்பட்டுள்ளது. சென்னை வார்டு 40, 43, 48, 49, 51-ல் முறைகேடு நடந்துள்ளது. பீகாரைப் போல வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. வேளச்சேரி டான்சி நகரில் திமுகவினருக்கு பயந்து பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை. சென்னையில் 40 வாக்குச்சாவடிகள் திமுகவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹைகோர்ட்டில் வழக்கு
திருச்சியில் திமுக வேட்பாளர் ஒருவர் 2 முறை வாக்களித்துள்ளார். நடந்த அனைத்தையும் தேர்தல் ஆணையம் கண் மூடி வேடிக்கை பார்த்துள்ளது. இவற்றை திசைதிருப்ப மேலூரில் பாஜக பூத் ஏஜெண்ட் மீது ஹிஜாப் குற்றச்சாட்டை கூறியுள்ளனர். 2012-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் 72%-க்கு மேல் வாக்குகள் பதிவாகின. தற்போது வாக்கு சதவீதம் குறைய காரணம் திமுகவினரின் அட்டூழியம்தான். டிஜிபியும், தேர்தல் ஆணையமும் தேர்தல் அமைதியாக நடந்ததாக கூறுவது நகைப்புக்குரியது. நாளை நேர்மையாக வாக்கு எண்ணிக்கை நடைபெறாது என்பதே எனது கணிப்பு. நாளை இரவு 7 மணி வரை வெற்றிச் சான்றிதழை வழங்க கூடாது என திமுகவினர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளைதான் நடைபெற உள்ளது, எனவே இன்னும் நேரம் இருப்பதால் முறைகேடு நடந்ததாக நாங்கள் குற்றம்சாட்டியுள்ள வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும், வாக்கு எண்ணிக்கையின்போதே வெற்றிபெறுவோருக்கு உடனுக்குடன் வெற்றிச் சான்றிதழை வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட உள்ளோம்.

எல். முருகன் வாக்கு விவகாரம்
சென்னையில் வார்டு 1670 ல் 1443 வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளதாக தெரிய வருகிறது. எல். முருகனின் வாக்கு எண் வரிசை 1174-ல் அவர் வாக்களிக்கும் முன்பே டிக் செய்துள்ளனர். எனவே டெண்டர் முறையில் வாக்களிக்குமாறு கோரினர். நாங்கள் முடியாது என்று சொன்னதால் எல்.முருகனை மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்க சொன்னர்கள். ஆனாலும் அவர் வேறொரு வரிசை எண்ணில் உள்ளவர் பெயரில்தான் வாக்களிக்க முடிந்தது. தவறில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அலுவலர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. கோவையில் முதல்வர், வேட்பாளர் , மாவட்ட அமைச்சர்களின் படத்துடன் ஹாட் பாக்ஸ் விநியோகம் நடந்துள்ளது. அதை பிடித்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என காவல்துறையினர் மிரட்டப்பட்டுள்ளனர். திமுகவினர் கத்திக் குத்து நடந்தால் மட்டுமே அதை வன்முறை என்பார்களா..? தேர்தல் நாளில் பல வன்முறை நடந்துள்ளது. ஆனால் அமைதியாக நடந்ததாக திமுகவினர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. இன்று சில வாக்குச்சாவடியில் கண்துடைப்புக்காக மறுதேர்தல் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளது. திமுகவினரால் காவல்துறை அதிகாரிகள் பயந்து போய் உள்ளனர்.

ஹிஜாப்பை அகற்ற சொல்லவில்லை
இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதை பாஜக வரவேற்கிறது. ஆனால் வாக்குச்சாவடியில் புர்கா அணிவது தொடர்பாக உயர்நீதிமன்றமே 'உங்களுக்கு மத நம்பிக்கைதான் முக்கியம் என்றால் வாக்களிக்கவே செல்ல வேண்டாம், கடவுச் சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முகம் காட்ட அனுமதிக்குப்போது வாக்களிக்கும்போது முக அடையாளத்திற்காக புர்காவை அகற்ற கூடாதா ' என உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒருமுறை கேள்வி எழுப்பியுள்ளது. பாஜக ஏஜெண்ட் முகத்தைதான் காட்ட சென்னார். ஹிஜாப்பை அகற்ற சொல்லவில்லை. சிசிடிவி காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிடட்டும். இவற்றையும் மீறி பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கமல் மீது தாக்கு
வாக்கு எண்ணும் மையத்திலேயே திமுக குதிரை பேரத்தை தொடங்க வாய்ப்பு இருக்கிறது. அராஜகம் செய்த திமுக அதிகாரத்திற்கு வரக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான பிறகு எங்களது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவிப்போம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது 100 விழுக்காடு நம்பிக்கை இருக்கிறது. விக்ரம் படத்தில் நடிப்பதா, பிக் பாசில் நடிப்பதா என கமல்ஹாசன் குழப்பத்தில் இருக்கிறார். கமல் சீரியஸ் அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு நான் பதில் கூறுவேன். அவர் மக்களுக்காக என்ன செய்கிறார்..? சாதி, மத அரசியல் செய்வதாக எதை வைத்து பாஜக மீது குற்றம் சாட்டுகிறார்?

நான் பழைய அரசியல்வாதி அல்ல
திமுகவுக்கு எதிராக நான் போலீஸ்காரன் போல இருந்தால்தான் சில விசயங்களை செய்ய முடியும் போல. பழைய அட்ஜஸ்ட்மெண்ட் அரசியல்வாதியாக இருந்தால் மக்களுக்கு நல்லதல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
அவிநாசியில் எல்.முருகன்..சிங்காநல்லூரில் அண்ணாமலை.. நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம் -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல்












Click it and Unblock the Notifications