சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் .. திருமண மண்டபங்களில் மது அரசாணையை வாபஸ் பெறுக- அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமண மண்டபங்களில் மது விநியோகம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணை சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுவுக்கு அனுமதி தரும் அரசாணை பிறபிக்கப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

Annamalai condemned to Tamilnadu Govt permission to consume liquor in marriage halls

இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது விநியோகத்துக்கு அனுமதி தரப்படவில்லை. ஆனால் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் பிற மாநிலங்களை போல அனுமதி வழங்கப்படுகிறது என விளக்கம் அளித்திருந்தார்.

தமிழ்நாடு அரசின் மது விநியோக புதிய அரசாணைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள கண்டனம்:

கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு. மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக.

Annamalai condemned to Tamilnadu Govt permission to consume liquor in marriage halls

வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக,சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று @BJP4TamilNadu சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமஐ கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+