சென்னையில் போலீஸ் மீது தாக்குதல்.. “திமுகவினருக்கு எப்படி இவ்வளவு துணிச்சல்?” பாய்ந்து வந்த அண்ணாமலை
சென்னை: சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்து கொண்டிருந்த காவலர் காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த சிலர் கடுமையாகத் தாக்கிய வீடியோ வெளியானது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் திமுகவினர் எனக் குறிப்பிட்டு காட்டமாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
சென்னை வேளச்சேரியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரி செய்து கொண்டிருந்த காவலர் காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த சிலர் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் போலீஸ்காரர், திமுகவினரால் தாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அண்ணாமலை தற்போது இமயமலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், காவலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை வேளச்சேரியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த காவலர் காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த திமுகவினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
சென்னை வேளச்சேரியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த காவலர் திரு. காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த திமுகவினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை… pic.twitter.com/NUzCJvkkrN
— K.Annamalai (@annamalai_k) April 14, 2025
காவல்துறையினரை தாக்கும் அளவுக்கு திமுகவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம். அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல்துறையினரின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது.
தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே. தற்போது, காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications