இவருக்கு போய் விருதா? என்ன இது? சுபையருக்கு தமிழ்நாடு அரசு விருது.. அண்ணாமலை கடும் அட்டாக்!
சென்னை: சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முகமது சுபையருக்கு 2024ம் ஆண்டுக்கான 'கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது' வழங்கப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, முகமது ஜுபைருக்கு வழங்கப்பட்டது கண்டனத்திற்கு உரியது. இந்த விருதைப் கடந்த காலங்களில் பெற்ற அனைவரையும் அவமதிக்கத்தக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. சமூக முரண்பாட்டை உருவாக்குவதற்கான விருதுக்குத்தான் அவர் சரியான நபராக இருந்திருப்பார். ஆனால் தவறாக அவருக்கு விருது வழங்கி உள்ளனர்.

இவர்கள் இப்படித்தான் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. தற்கொலை படை தாக்குதலையே சிலிண்டர் குண்டுவெடிப்பு என்றுதான் இவர்கள் கூறினார்கள். அப்படி இருக்க இது போல பிரிவினையை ஏற்படுத்த கூடிய நபருக்கு இவர்கள் விருது வழங்கி உள்ளனர்.
மதநல்லிணக்க விருதுக்கான நபரை தவறை திமுக தவறாக தேர்வு செய்து உள்ளது. இப்படி ஒரு நகரைக்கு திமுக தேர்வு செய்ததில் நம்மை எந்த ஆச்சரியமும் படுத்தவில்லை, என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் வைத்துள்ளார்.
பின்னணி என்ன?: கடந்த வருடம் மார்ச் மாதம் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் இரண்டு வீடியோக்கள் வேகமாக பரவின. பீகாரில் இந்த வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது ஈரோடு, நாமக்கல், கோவையில் வேலை பார்க்கும் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் பரவி வந்தன.
வட இந்தியர்களை தமிழர்கள் குறி வைத்து தாக்குவதாகவும், கொலை செய்வதாகவும் பொய்யான புகார்கள் வைக்கப்பட்டன.
பாஜக பிரச்சனை: பீகார் மாநில எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகதான் இந்த விவகாரத்தில் முதலில் பிரச்னையை கிளப்பியது. தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று அம்மாநில சட்டசபையில் அமளி செய்தது. இதற்கு பொய்யான வீடியோக்களையும் ஆதாரமாக காட்டியது.
இதனை தடுக்காமல் பீகார் மாநில அரசு, தமிழ்நாடு அரசுடன் கைகோர்த்து வேடிக்கை பார்க்கிறது என்றும் பொய்யான வீடியோக்களை பாஜக காட்டி அமளி செய்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் வட இந்தியர்கள், முக்கியமாக பீகார் மக்கள் தாக்கப்படுவதாக வைக்கப்படும் பொய்யான புகார்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவியது.
அல்ட் நியூஸ்: இந்த விவகாரம் பெரிய சர்ச்சையான போது.. அந்த வீடியோக்கள் பொய்யானது என்று முதலில் கூறி வதந்தியை காலி செய்ததே அல்ட் நியூஸ் நிறுவனத்தின் முகமது சுபையர்தான். இந்த விவகாரம் கலவரமாக மாறாமல் தடுத்தது அவர்தான்.
இந்த இரண்டு வீடியோவில் ஒன்று, பீகார்-ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் மோதல் சம்பவம். அது இங்கே நடக்கவே இல்லை. மற்றொன்று தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குள் நடத்திக்கொண்ட சண்டை. இதைத்தான் பொய்யாக தமிழ்நாடு சம்பவம் என்று இவர்கள் பரப்பி வருகிறார்கள்.
முக்கியமாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி தமிழ்நாடு அப்போது வந்த நிலையில், அவருக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பாஜக சார்பாக அம்மாநில சட்டசபையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அவர் விளக்கம் அளித்தும் கூட அம்மாநில பாஜக இந்த விவகாரத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. தேசிய அளவில் ஸ்டாலின் கூட்டணி அமைக்க வேண்டும், ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்ற குரல்களுக்கு இடையே தமிழ்நாடு குறித்த தவறான பிம்பம் வடஇந்தியர்கள் இடையே பரப்பப்பட்டு வருகின்றன.
கலவரத்தை தடுத்தார்: இந்த உண்மையை வெளியே கொண்டு வந்தது அல்ட் நியூஸ் நிறுவனத்தின் முகமது சுபையர்தான். அன்று பெரிய கலவரத்தை தடுத்தது அல்ட் நியூஸ் நிறுவனத்தின் முகமது சுபையர்தான். இதையடுத்தே தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முகமது சுபையருக்கு 2024ம் ஆண்டுக்கான 'கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது' வழங்கப்பட்டிருக்கிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications