விஜயலட்சுமி அட்டாக் செய்தால் என்னை ஏன் சீமான் வம்பிழுக்கிறார்? அண்ணாமலை நறுக்! பிரஸ்மீட்டில் கலகல
சென்னை: நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டை திசை திருப்பவே பாஜகவை நாம் தமிழர் சீமான் வம்புக்கு இழுக்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. இந்த நிலையில் பாஜக தெற்கில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக பாஜக தமிழகத்தில் 3ஆவது பெரிய கட்சியாக உருவாகும் என்றார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: தனித்து நின்று போட்டியிட்டு ஆண் மகனாக காட்ட வேண்டும். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு தனியாக நின்று பாஜக பெற்ற வாக்குகள் எவ்வளவு? என்னை (நாம் தமிழர்) தாண்டி இருந்தது என்றால் நான் கட்சியை கலைத்துவிட்டு சென்று விடுகிறேன் என தொடையில் தட்டி சீமான் சவால் விடுத்தார்.
மேலும் அவர் கூறுகையில் தனித்து போட்டியிட்டால் யார் 3ஆவது கட்சி, பெரிய கட்சி என தெரிந்து விடும். கூட்டணி வைத்து போட்டியிட கூடாது. ஒத்தைக்கு ஒத்தையாக தனித்து போட்டியிடனும் சிங்கம் மாறி நிற்க வே்ண்டும். தனித்து சண்டை போட வேண்டும். அவன்தான் வீரன். இவ்வாறு சீமான் பேசினார்.
இந்த நிலையில் சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய போது சீமானின் சவால் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியிருப்பதாவது: விஜயலட்சுமி அக்கா பேசும் போதெல்லாம், சீமான் என் மேல கிளம்பி வருவார். அவர் அட்டாக் செய்தால் இவர் என் மீது அட்டாக் செய்வார். நான் சீமான் அண்ணனை வம்புக்கு இழுத்தேனா?
அவர்தான் விஜயலட்சுமிக்கு பதில் சொல்ல வேண்டும். நான் பெருந்தன்மையாக சொல்கிறேன். ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகளை பார்க்க போகிறீர்கள். திராவிட கட்சிகள் இல்லாமல் பாஜக தனித்து நிற்கிறது. தமிழகத்தில் 19 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளோம்.
4 இடங்களில் எங்கள் கட்சியின் சின்னத்தை பயன்படுத்தி சுயேச்சைகள் நிற்கிறார்கள். நாம் தமிழர் கட்சியை பாஜகவின் 23 இடங்களில் கம்பேர் செய்யுங்கள். நாங்கள் வாங்கும் வாக்குகளில் 30 சதவீத வாக்குகளை கழித்துவிட்டு பாருங்கள், அப்பயாவது நாம் தமிழர் கட்சி வாங்கிய ஓட்டுகள் பாஜக ஓட்டுக்களை நெருங்கியதா என்று!
சீமான் ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறார். அவர் நன்றாக இருக்க வேண்டும். இதே முன்பு ஒரு முறை என்ன சொன்னாரு, மக்கள் நலக் கூட்டணியை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்குவேன், இல்லாவிட்டால் கட்சியை கலைத்துவிடுவேன் என்றார். அந்த தேர்தல் முடிவுகள் வந்த போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இது குறித்து கேட்ட போது அப்படியே மழுப்பினார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு டபுள் டிஜிட்.. அதிமுகவோடு விவாதத்திற்கு ரெடி.. அண்ணாமலை பரபர
எனவே சீமானை தர்மசங்கடத்தில் நான் விட விரும்பவில்லை. தமிழகத்தில் அவர் கட்சி நடத்தட்டும். அவருடைய குரல் முக்கியமான குரல். எனவே நான் விதண்டாவாதத்திற்கு வரவில்லை. சீமான் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. எனவே சம்பந்தமே இல்லாமல் எதையோ திசை திருப்ப எங்களை இழுக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
தமிழகத்தில் இருந்து பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். இந்தியாவில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வென்று 3ஆவது முறையாக ஆட்சியில் அமரும். அது போல் பிரகாஷ் ராஜ் கர்நாடகா தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்கவில்லை அவர் பிரதமர் குறித்து விமர்சித்ததை எல்லாம் பெரிதுபடுத்த தேவையில்லை என்றார் அண்ணாமலை.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications