அண்ணாமலைக்கு அலர்ஜி.. "உள்ளே" இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பயந்துவிட்டார்.. ரகசியத்தை சொன்ன புள்ளி
சென்னை: செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஐடியா கொடுத்தால் தவறுதான். ஆனால் அண்ணாமலை செந்தில் பாலாஜிக்கு பயப்படுகிறார் என்று தானே அர்த்தம். செந்தில் பாலாஜிக்கு பயந்துதான் அவரை உள்ளே போட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். ஏன் பயப்படுகிறீர்கள், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பாஜக கோயம்புத்தூர் வேட்பாளர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், ஜெயிலில் இருந்து கொண்டு ஒருவர் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். அவர் எழுதிய கதையைதான் இங்கு வந்திருக்கும் அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். சிறையில் இருந்தபடியே செல்போனில் அமைச்சர்களுடன் பேசி வருகிறார் செந்தில் பாலாஜி. சிறையில் இருந்து கொண்டே தங்கம், பணம் கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள்.

ஆனால் அது இந்த முறை நடக்காது. எவ்வளவு தங்க சுரங்கத்தையே திமுகவினர் தோண்டி எடுத்து கொண்டு வந்தாலும் மக்கள் அதற்கெல்லாம் அசரமாட்டார்கள். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஜூன் 4ஆம் தேதி சாமானியனின் குரல் மூலம் யார் வெல்வார்கள் என தெரியவரும். எங்களுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும். ஆனால் நான் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த பேட்டி குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அண்ணாமலை ஏன் பிரஸ் வாகனத்தை தடுத்து நிறுத்துகிறார். நாங்கள் பணமே கொடுக்கவில்லை. அண்ணாமலை ஏன் பிரஸ் வேனை தடுத்து நிறுத்துகிறார். பணம் கொடுக்க போகிறார்.. அது தெரிய கூடாது என்று தடுத்து நிறுத்துகிறார். செய்திகளை விட வேண்டியது தானே ? ,
கோவைக்கு பணம் சென்றுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு சென்றுள்ளது. 6-7 வேட்பாளர்களுக்கு பணம் போய் சேர்ந்துவிட்டது. பாஜகவும் பணம் கொடுக்க போகிறது. அப்படி இருக்க அவர்கள் உத்தமர் மாதிரி பேச கூடாது. நேற்று பிடிப்பட்ட 4 கோடி ரூபாய் போல அண்ணாமலை பணம் பிடிபடவில்லை. அவ்வளவுதான். பாஜகவிலும் வாரிசு அரசியல் பேசுகிறார்கள்.
மோடிக்கு மட்டும்தான் குடும்பம் இல்லை. மற்றபடி எல்லா இடங்களிலும் குடும்பம் இருக்கிறது. குடும்ப கட்சிகளுடன் பாஜக கூட்டணியும் வைத்துள்ளது. அவர்கள் கட்சியில் சேர்பவர்களுக்கு எல்லாம் கேஸ் க்ளோஸ் செய்கிறார்கள். ரபேல் ஊழல் இன்னும் இருக்கிறது. இவர்கள் ஆட்சியை விட்டு போனதும் உடனே அதன் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணாமலை வேண்டுமென்றால் செந்தில் பாலாஜிக்கு எதிராக சிறை துறையில் புகார், தேர்தல் ஆணையம் புகாரை கொடுக்கட்டும் . செந்தில் பாலாஜி பற்றி பேசும் அண்ணாமலை அதை புகாராக கொடுக்கட்டும் அண்ணாமலைக்கு பயம் வந்துருக்கும் அடையாளம் இது. செந்தில் பாலாஜி இன்னும் போர்ஸ் ஆக இருக்கிறார்.
அதனால் அண்ணாமலை இப்படி பேசுகிறார். செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஐடியா கொடுத்தால் தவறுதான். ஆனால் அண்ணாமலை செந்தில் பாலாஜிக்கு பயப்படுகிறார் என்று தானே அர்த்தம். செந்தில் பாலாஜிக்கு பயந்துதான் அவரை உள்ளே போட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். ஏன் பயப்படுகிறீர்கள். செந்தில் பாலாஜி திட்டம் எல்லாம் நமக்கு தோல்வியை கொண்டு வரும் என்பது அண்ணாமலைக்கு தெரிந்து இருக்கிறது.
அண்ணாமலை செந்தில் பாலாஜிக்கு பயப்படுகிறார் என்று தானே அர்த்தம். செந்தில் பாலாஜிக்கு பயந்துதான் அவரை உள்ளே போட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். செந்தில் பாலாஜி திமுகவிற்காக பாடுபட்டுள்ளார். கட்சியை வளர்த்துள்ளார். அங்கே கட்சியை முன்னேற்றி உள்ளார். அவர் இருக்கிற கட்சியில் நேர்மையாக இருக்கிறார். அந்த கட்சிக்காக உழைக்கிறார். தலைமையை அவர் சிறப்பாக கவனிக்கிறார்.
அண்ணாமலைக்கு இது பெரிய அலர்ஜி ஆகிவிட்டது. சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி அண்ணாமலையை பயமுறுத்துகிறார் என்பதே பெரிய விஷயம்தான் என்று ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications