மக்களின் இதயக்கனி..அண்ணாமலை தனி நபர் அல்ல..எல்லோருக்கும் பொறாமை..கரு. நாகராஜன் கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையின் வளர்ச்சியை தமிழக மக்களிடம் அவருக்கு ஏற்பட்டிருக்கும் மரியாதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் முன்னாள் அமைச்சர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவதாக பாஜக துணைத்தலைவர் கரு. நாகராஜன் கூறியுள்ளார். சி.வி. சண்முகம் நிதானமின்றி பேசுவதாகவும், தெர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜூ யாரைப் பார்த்து பொம்மை தலைவர் என்று கூறுகிறார் என்று கரு. நாகராஜன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பாஜக இடையே கடும் மோதல் மூண்டுள்ளது. வார்த்தைப்போர் வெடித்துள்ளதால் கூட்டணி என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Annamalai issue: Karu Nagarajan attacks CV Shanmugam, Sellur Raju and EX ADMK Minister Sellur Raju

ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியது அதிமுகவினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது பாஜக தேசிய தலைமையின் கடமை. எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என்றும் கேட்டார் ஜெயக்குமார். பாஜகவை செடி என்றும் கூறி கிண்டல் அடித்தார்.

ஜெயக்குமாரின் கருத்துக்கு எதிர்வினையாற்றினார் கரு. நாகராஜன் , பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறினார். இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சை கண்டித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், ஓ.எஸ். மணியன், செல்லூர் ராஜூ ஆகியோர் தங்கள் தரப்பு கருத்துக்களை முன் வைத்தனர். அண்ணாமலை என்பவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கூறி வருகிறார். பாஜக வேறு அண்ணாமலை வேறு. உனக்குதான் அதிமுக புடிக்கலையே போய்யா என்று கொந்தளித்தார் சி.வி. சண்முகம்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன், பாஜகவிடம் இருந்து அண்ணாமலையை தனிமைப்படுத்த முடியாது என்று சொன்னார். முன்னாள் அமைச்சர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். தெர்மாகோல் அமைச்சர் என்று பெயரெடுத்த செல்லூர் ராஜூ, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை பொம்மை அமைச்சர் என்று சொல்கிறார்.

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், நிதானமாகவே பேசமாட்டார். அவர் பேசுவதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவரது வளர்ச்சி இங்குள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. மக்களின் இதயக்கனியாக இருக்கிறார் அண்ணாமலை. அதை பொறுக்க முடியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்றும் கரு. நாகராஜன் குற்றம் சாட்டினார்.

அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது வேதனையளிக்கிறது. வருத்தம் அளிக்கிறது. கூட்டணியில் பெரியண்ணன் என்று யாரும் இல்லை எல்லாருமே ஒன்றுதான் என்றும் கரு. நாகராஜன் கூறியுள்ளார். கூட்டணியை தீர்மானிக்க இன்னும் காலம் உள்ளது என்றும் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+