கைலாசா பிரதமராகலாம்.. அண்ணாமலைக்கு பதவி பார்சல்! நித்தியானந்தா புரிஞ்சுப்பாரு -அமரை கலாய்த்த காயத்ரி
“நித்தியானந்தாவின் ஐக்கிய நாட்டு கைலாசா பிரதமரும் முதலமைச்சரும் இல்லாமல் ஃப்ரீயாக இருக்கிறது.” என்று கலாய்த்த காயத்ரி
சென்னை: நித்தியானந்தாவின் கைலாசாவில் பிரதமரும் முதலமைச்சரும் இல்லை என்றும், அங்கு அண்ணாமலைக்கு முதலமைச்சர் பதவி வழங்க தன்னால் உதவி செய்ய முடியும் என்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்து இருக்கிறார். அமர் பிரசாத் தெரிவித்த கருத்துக்கு அளித்த பதிலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
பாஜக ஐடி விங் முன்னாள் மாநில தலைவர் நிர்மல் குமார் ட்விட்டரில், "என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
அண்ணாமலையை 420 மலை என்று விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

அமர் பிரசாத் ரெட்டி கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, "பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. கூட்டணியில் இருந்தபடி அதிமுக இதை செய்திருக்க கூடாது. பாஜகதான் தமிழ்நாட்டின் வருங்காலம். அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும்." என்று தெரிவித்தார்.

காயத்ரி ரகுராம் விமர்சனம்
இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை ட்விட்டரி பகிர்ந்துள்ள பாஜகவின் முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம், அண்ணாமலையையும் அமர் பிரசாத் ரெட்டியையும் கலாய்த்தி உள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "நித்தியானந்தாவின் ஐக்கிய நாட்டு கைலாசா பிரதமரும் முதலமைச்சரும் இல்லாமல் ஃப்ரீயாக இருக்கிறது.

கைலாசாவில் முதலமைச்சர் பதவி
உங்களுக்காக ஒரு பிரதமர் போஸ்ட் மற்றும் அண்ணாமலைக்கு ஒரு முதல்வர் போஸ்டை பார்சல் செய்ய என்னால் கோர முடியும். ஆன்மீகத்துடன் மக்களுக்கு சேவை செய்யலாம். ஐக்கிய நாட்டின் கைலாசாவில். உங்கள் இருவர் பதவி பைத்தியக்காரத்தனம் நித்யானந்தாவால் விவேகமான புரிதலுடன் கையாளப்படும்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நிர்மல் குமார் விலகல் ஏன்?
அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல், திமுக அமைச்சருடன் ரகசியமாக பேசுகிறார், 420 மலை, பாஜகவினரை செருப்பாக பயன்படுத்துகிறார், மனநலம் குன்றியவர் போல் நடந்துகொள்கிறார் என விமர்சனங்களை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிர்மல் குமார் தேசிய தலைமையிடம் இதுகுறித்து புகாரளித்துவிட்டதாகவும் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மனநலம் குன்றவர் போல்
"மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

ஏமாற்ற நினைக்கிறார்
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?" என்று தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications