அடிச்சார் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. அண்ணாமலைக்கு அடிச்சது லக்! மோடி கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் அதற்கான ரிசல்ட் மே நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க பாஜகவில் மீண்டும் அதிகாரப்போட்டி அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அண்ணாமலையின் ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக சொல்லப்படும் தகவல் அவரது ஆதரவாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த தலைவர்களில் ஒருவராக அண்ணாமலை கருதப்பட்டார். அவர் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், கட்சியின் செயல்பாடுகள் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்றன.

பல்வேறு அரசியல் விவாதங்களிலும் அவர் முன்வந்து பேசினார். இதனால், தமிழக அரசியலில் அவரது பெயர் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. ஆனால் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, அவரது அரசியல் பயணம் என்னவாகும் என்ற கேள்வி எழத் தொடங்கியது.
அண்ணாமலை
அவருக்கு தேசிய அளவில் உயர்ந்த பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே நிலவியது. குறிப்பாக தென் மாநிலங்களில் ஒட்டுமொத்த பாஜக முகமாக செயல்படும் வகையில் அவருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம் என்றே அவரது ஆதரவாளர்கள் கருதினர். ஆனால்,அது நடக்கவில்லை. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாததும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
2026 சட்டசபை தேர்தல்
அவர் போட்டியிடாததற்கு தனது குடும்ப சூழ்நிலையே காரணம் என அவரது தரப்பில் கூறப்பட்டாலும், அரசியல் ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் சிலர் கூறினர். குறிப்பாக அவர் விரும்பிய தொகுதியில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதன் காரணமாக, தேர்தல் பரப்புரைகளில் அவர் முழுமையாக செயல்படவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இறுதிக்கட்ட பரப்புரைகளில் மட்டுமே அவர் தோன்றியதும் இந்த பேச்சை மேலும் அதிகரித்தது.
பாஜக தேசிய தலைமை
இதற்கிடையில் அவர் பாஜக தேசிய தலைமை உடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பின் போது அவருக்கு எதிர்காலத்தில் அவருக்கு முக்கிய வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிறகே அவர் இறுதிக்கட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு அண்ணாமலைக்கு எம்பி பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலங்களவை வாய்ப்பு
குறிப்பாக ஆந்திர மாநில சட்டமன்றத்தின் மூலம் மாநிலங்களவைக்கு அனுப்பும் வாய்ப்பு குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் போதுமான எம்.எல்.ஏ.க்கள் பலம் இருப்பதால், மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதில் சிக்கல் இருக்காது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒவ்வொரு இடம் ஒதுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலை ஆதரவாளர்கள்
அந்த வகையில், கூட்டணி கட்சிகளுக்குக் கிடைக்கும் இடங்களில் ஒன்றை பாஜகவுக்கு வழங்கும் சூழல் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த இடம் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும், அண்ணாமலை எதிர்காலத்தில் தனியாக புதிய அரசியல் முயற்சி மேற்கொள்ளக் கூடும் என்ற பேச்சுகளும் சில காலமாக நிலவி வந்தன. அந்த முயற்சியை தவிர்க்கவும், அவரை தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கச் செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications