சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர வேண்டும்! ஆளுநர் ரவியின் முடிவை எதிர்க்கும் அண்ணாமலை?
சென்னை: சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்றும் ஒப்புதல் அளிக்காதது ஏன் என்பது பற்றி ஆளுநர் மாளிகை தான் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் ஒப்புதல் கோப்பில் ஆளுநர் கையெழுத்திடாததற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அண்ணாமலை தனது பேட்டியின் மூலம் உணர்த்தியுள்ளார். சங்கரய்யாவை பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடியவர் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.

சங்கரய்யாவுடன் வேறு யாருக்கேனும் டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரைத்து பட்டியல் அனுப்பப்பட்டதா என்ற விவரம் தனக்குத் தெரியாது என ஆளுநர் மாளிகையை கோர்த்துவிட்டுள்ளார். இதனிடையே தமிழ்நாட்டில் இன்னும் சாதிய வன்கொடுமைகள் நிகழ்வது தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் சாதிய வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிக்கையொன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார். அதன்படி, சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு தீர்மானம் நிறைவேற்றி அதற்கு அனுமதி வழங்க கோரி ஆளுநருக்கு அனுப்பியும் வைத்துள்ளது. ஆனால் ஆளுநர் ரவி அதற்கு இன்னும் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த முடிவை பாஜகவே ரசிக்கவில்லை என்பதை தான் அண்ணாமலை சூசகமாக தனது பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் அரசியல் தலைவருமான சங்கரய்யா நூற்றாண்டுகளை கடந்து வாழக்கூடிய வரலாறாக திகழ்பவர். சங்கரய்யாவை ஆளுநர் அவமதிப்பு செய்துவிட்டதாக விமர்சனக்கணைகள் வீசப்படும் நிலையில், ஆளுநர் முடிவுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை போல் அண்ணாமலையின் பேட்டி அமைந்துள்ளது.
சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற காரணத்தையாவது அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் பலரும் ஆர்வமாக உள்ளனர்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!












Click it and Unblock the Notifications