‛‛Fool Paradise-ல் வாழும் கார்கே’’.. என்னது மத்திய அரசு கவிழுமா? காங்கிரசுக்கு அண்ணாமலை தந்த பதிலடி
சென்னை: மத்தியில் அமைந்துள்ள பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்று கூறிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சிறிது நேர சந்தோஷத்துக்காக முட்டாள் உலகில் வாழ்வது போல் பேசுகிறார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் மத்தியில் தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

நாங்கள் 370 தொகுதிகளிலும் வெல்வோம். எங்கள் கூட்டணி 400 இடங்களை நோக்கி செல்கிறது எனக்கூறிய பாஜகவுக்கு இந்த தேர்தலில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஏனென்றால் பாஜகவுக்கு 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
அதேபோல் எப்படியாவது இந்த முறை பாஜகவை வீழ்த்தி அரியணை ஏறிவிடலாம் என்று நினைத்த ‛இந்தியா' கூட்டணிக்கும் அந்த ஆசை நிறைவேறவில்லை. இதனால் தனிப்பெரும் கட்சியாக மாறிய பாஜக தனது கூட்டணி கட்சிகளில் உள்ள 52 எம்பிக்களின் ஆதரவுடன் மத்தியில் தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இதன்மூலம் 3வது முறையாக மோடி மீண்டும் பிரதமராகி உள்ளார்.
இந்நிலையில் தான் மத்தியில் பாஜக கூட்டணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்பிக்கள் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 12 எம்பிக்கள் உள்ளன. இவர்கள் 2 பேரும் கூட்டணி மாறும் குணம் கொண்டவர்கள் என்பதால் மத்தியில் பாஜகவுக்கு சிக்கல் ஏற்படலாம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில், ‛‛மத்தியில் பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநாய கூட்டணி என்பது தவறுதலான கூட்டணியாகும். பிரதமர் மோடிக்கு பெரும்பான்மை இல்லை. அது ஒரு மைனாரிட்டி அரசு. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். ஆனால் நாங்கள் கூட்டணியை தொடர விரும்புகிறோம். இது நாட்டுக்கு நல்லதாக இருக்க வேண்டும். நாட்டை வலுப்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்'' என்றார்.
இந்நிலையில் தான் மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி , ‛‛ஜனநாயக முறைப்படி பதவியேற்பு விழாவை பார்த்துவிட்டு மத்தியில் அரசு கவிழும் என்று நினைத்தால் அவர் "fool's paradise'' ல் வாழ்கிறார். Fool's Paradise என்பதன் மூலம் அண்ணாமலை மல்லிகார்ஜுன கார்கேவை விமர்சனம் செய்துள்ளார். அதாவது மல்லிகார்ஜுன கார்கே தற்காலிக சந்தோஷத்துக்காக முட்டாள்கள் வாழும் உலகில் இருப்பதுபோல் இப்படி சொல்லி வருகிறார் என்பதை அண்ணாமலை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications