அமைச்சர் காந்தியை ‘டார்கெட்’ செய்த அண்ணாமலை.. ஊழல் ஒழிப்புத்துறையில் புகார் அளிக்க திட்டம்!
சென்னை: கைத்தறித்துறை அமைச்சர் ஆர் காந்தி மீது தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளிக்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்மையில் ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "என் மண் என் மக்கள்" பயணம் மேற்கொண்டபோது, தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி மீது கடுமையாக குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பேசி இருந்தார். குறிப்பாக, இலவச வேட்டி சேலை வங்கும் திட்டத்தில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டினார்.

அமைச்சர் காந்தியின் பெயருக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் பொருத்தமே கிடையாது. நெசவுத் தொழிலாளர்களிடம் வேட்டி, புடவை கொள்முதலுக்கு கமிஷன் கேட்பதால் கமிஷன் காந்தி என்றழைக்கப்படும் இவர், பொங்கல் தொகுப்பில் இலவச காட்டன் வேட்டி சேலை வழங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார். விஞ்ஞானத் திருட்டில் திமுகவை மிஞ்ச இந்த உலகத்திலேயே ஆள் கிடையாது.
வழக்கமாக வேட்டி நெசவு செய்ய பருத்தி நூல் மட்டுமே பயன்படுத்தப்படும், இந்த ஆண்டு பருத்தி நூல் குறைவாகவும் பாலியஸ்டர் நூல் அதிகமாகவும் பயன்படுத்தி நெசவு செய்துள்ளனர். கிலோ ரூபாய் 320 வரை விற்கப்படும் பருத்தி நூலை வாங்காமல், அதில் பாதி விலையான ரூபாய் 160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றி உள்ளனர்.
பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட ஒரு வேட்டியை, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்ததில், இவர்கள் மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர் மற்றும் வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருப்பது தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள். கோவை ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் சோதனை நடத்தியதில் இந்த முறைகேடு தெரியவந்தது" என்று பேசியிருந்தார்.
இதையடுத்து, இலவச வேட்டி, சேலை நெய்ய பாலியஸ்டர் நூலை பயன்படுத்தும் நடைமுறை உள்ளது என அரசாணையை சுட்டிக்காட்டி இருந்தார் அமைச்சர் காந்தி. அதைக் குறிப்பிட்டு மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை. வேட்டியில் வார்ப் பகுதியை நெய்ய பருத்தி நூல் தான் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு, வேட்டியில் 78% பாலியஸ்டர் நூலை பயன்படுத்தியுள்ளனர் என்றும், இதுதொடர்பாக ஆதாரங்களுடன் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் நடந்திருக்கிறது என்று, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி மீது குற்றச்சாட்டு வைத்திருந்தோம். அதற்கு அவர் 2003 ஆம் ஆண்டு அரசாணையை மேற்கோள் காட்டி, மக்களைத் தவறாகத் திசைதிருப்புகிறார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு அரசாணையின்படி, வேட்டியில் வெஃப்ட் பகுதி நெய்ய பாலியஸ்டர் நூலை பயன்படுத்தலாம். ஆனால், வார்ப் பகுதியை நெய்ய கடந்த ஆண்டு வரை 100% பருத்தி நூல் தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு, வார்ப் பகுதி நெய்யவும், விலை குறைவான பாலியஸ்டர் நூலை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு கிலோ ரூபாய் 320 வரை விற்கப்படும் பருத்தி நூலைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே, அதில் பாதி விலையான ரூபாய் 160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வார்ப் பகுதியை நெய்திருக்கிறார்கள். ஒரு வேட்டியில், 78% பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் நாங்கள் சோதனை செய்ததும் வார்ப் பகுதியைத்தானே தவிர, வெஃப்ட் பகுதியை அல்ல. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களுடன், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் தமிழ்நாடு பாஜக சார்பாக புகார் அளிக்க உள்ளோம்." என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி












Click it and Unblock the Notifications