கொந்தளித்த அண்ணாமலை.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே.. நீட் மறுதேர்வால் மத்திய அரசுக்கு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பாஜகவில் இருந்து விலகிய தமிழ்நாடு முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார். புதிய இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்துள்ள அண்ணாமலை முதல் முதலாக நீட் மறுதேர்விற்கான ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு இந்த ஏற்பாடுகள் பிரச்சனையை தீர்க்காது. கூடுதல் பிரச்சனைகளை தான் உருவாக்கும் என்று மத்திய அரசுக்கு வார்னிங் செய்துள்ளார்.

நம் நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2026-2027 ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் (NEET)தேர்வு மே 3ம் தேதி நடைபெற்றது. ஆனால் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

Annamalai slams NEET

இதையடுத்து 'நீட்' மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நீட் மறுதேர்வை எந்த பிரச்சனையும் இன்றி நடத்தி முடிக்க மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்திய விமானப்படை விமானங்களில் வினாத்தாள் கொண்டு செல்வது, பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு மற்றும் ரயில்வே போலீசாரை பணியமர்த்துவது உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் தான் பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகிய தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நீட் மறுதேர்வு விஷயத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அண்ணாமலை 'வி தி லீடர்' என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளார். விரைவில் அதனை அரசியல் கட்சியாக மாற்றம் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் நீட் மறுதேர்வு தொடர்பாக மத்திய அரசை விமர்சனம் செய்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''2 அடுக்கு CRPF+CISF பாதுகாப்புடன் இந்திய விமானப்படையின் விமானப் போக்குவரத்து. AI கண்காணிப்புடன் கூடிய 4 அடுக்கு சிசிடிவி கேமராக்கள். தேர்வறைக்குள் நுழைவதற்கு முன் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகாரம், பல கட்ட சோதனைகள். பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்புடன் கூடிய பலகட்ட மேற்பார்வை செய்யப்பட உள்ளது.

இது எல்லாம் ஏதோ உயர்ரக, ரகசிய ராணுவ மென்பொருளை வாங்குவதற்கான ஏற்பாடுகள் அல்ல. 2026 ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வுக்காக கல்வி அமைச்சகம் செய்துள்ள ஏற்பாடுகள் தான். கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு மூலம் வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளை ஒவ்வொரு மாணவரும் பாராட்டுவார்கள்.

ஆனால், தேர்வறைக்குள் முன் கடுமையான சோதனைகள், நீட்டிக்கப்பட்ட சோதனை நேரம் மற்றும் ஒட்டுமொத்த தேர்வு நேரத்தை 180 நிமிடங்களில் இருந்து 195 நிமிடங்களாக அதிகரிப்பது ஆகியவை ஏற்கனவே அதிகரித்துள்ள மாணவர்களின் தேர்வு மன அழுத்தத்தை மேலும் கூட்டவே செய்யும்.
வினாத்தாள் கசிவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், பல மாதங்களாகத் தயாராகி வரும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவதற்கு முன்பு, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கூடுதல் சுமையை அரசு மறந்துவிட்டது.

இது நமது தேர்வு முறையின் நோக்கத்தையே சிதைக்கிறது. அதுமட்டுமின்றி தேர்வு மன அழுத்தத்தைக குறைப்பதற்கான தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் இலக்கையும் பாழாக்குகிறது. தேர்விற்காக இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்வதில் இன்னமும் சிக்கல்கள் நீடிக்கின்றன. எனினும், தேசிய தேர்வு முகமை இந்த சிக்கல்களை விரைவில் சரிசெய்வதாக மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளது. இருப்பினும், நீட் மறுதேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள இந்த அணுகுமுறை தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வாக அமையாமல், ஒரு புதிய பிரச்சினைகளை உருவாக்குமோ என்ற கவலை எனக்குள் எழுகிறது'' என்று வார்னிங் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+