தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆனால், பா.ஜ.க கோட்டையான கொங்கு மண்டலத்தில் மட்டும் ஒருவித 'அமைதியான புயல்' வீசத் தொடங்கியிருக்கிறது. அதுவும் மேலிடத்து உத்தரவை மீறி, தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள் முன்னெடுத்துள்ள அந்த 'சீக்ரெட் ஆபரேஷன்', இப்போது கமலாலயத்தின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது.

tamil nadu assembly elections 2026 bjp annamalai

அண்ணாமலையின் 'அன்பு கூட்டம்' - ரகசியக் கூட்டணி!

அண்ணாமலைக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது, அவரது தீவிர விசுவாசிகளுக்கு இன்னும் ஆறாத வடுவாகவே இருக்கிறது. அண்ணாமலை என்னவோ தலைமைக்குக் கட்டுப்பட்டு, கூட்டணி வேட்பாளர்களுக்காக ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் 'அண்ணாமலை ஆர்மி'யின் மனநிலை வேறாக இருக்கிறது.

சமீபத்தில் கொங்கு மண்டலத்தில் 'அண்ணாமலையின் அன்பு கூட்டம்' என்ற பெயரில் ஒரு ரகசிய அமைப்பு உருவெடுத்திருக்கிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் என அண்ணாமலையின் கோட்டையாகக் கருதப்படும் மாவட்டங்களில், இவர்கள் ரகசியக் கூட்டங்களை நடத்தி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

"தலைவருக்கு வாய்ப்பு கொடுக்காதவர்களுக்குத் தேர்தலில் ஒரு பாடம் புகட்ட வேண்டும்" என்பதே இவர்களின் ஒற்றை நோக்கமாக இருக்கிறது.

ஐந்து நபர் கொண்ட 'மைண்ட் சேஞ்ச்' டீம்!

இந்த அன்பு கூட்டத்தின் செயல்பாடுகள் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு, அவருக்குக் கீழ் ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குழு (Team) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டீம் என்ன செய்கிறது தெரியுமா?

பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்குள் சைலண்டாக நுழைகிறார்கள்.

அங்கே இருக்கும் தீவிரத் தாமரை ஆதரவாளர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுகிறார்கள்.

"தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு நம் வலிமையைக் காட்ட வேண்டும். அதனால் இந்த முறை தேர்தல்ல கொஞ்சம் மாத்தி யோசிங்க..." என மெல்லத் தூபம் போடுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், தேர்தல் நேரத்தில் சொந்தக் கட்சியினரையே எதிர்க்கும் ஒரு 'உள்ளடி' வேலையை இந்த டீம் கச்சிதமாகச் செய்து வருகிறது. இது மேலிடத்துக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு மவுனப் புரட்சி என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

கண்காணிப்பில் கமலாலயம்: அடுத்தது என்ன?

அண்ணாமலை ஆதரவாளர்களின் இந்தத் திடீர் மூவ், பா.ஜ.க தலைமையின் காதுகளுக்கு எட்டியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் வாக்கு சதவீதம் குறைந்தால் அது அண்ணாமலையின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என ஒரு தரப்பு நினைக்க, மற்றொரு தரப்போ இதைப் பயன்படுத்தி அண்ணாமலையை முழுமையாக ஓரங்கட்டத் திட்டமிடுகிறது.

தற்போது அந்த ரகசியக் குழுவில் இருப்பவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதைத் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகிறது கமலாலயம். இப்போதைக்கு அண்ணாமலை பிரச்சாரத்தில் பிஸியாக இருந்தாலும், அவருக்குத் தெரியாமலேயே அவரது ஆதரவாளர்கள் நடத்தும் இந்த 'உள்ளடி' அரசியல், தேர்தல் முடிவுகளில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றே தோன்றுகிறது.

அண்ணாமலையின் 'அன்பு கூட்டம்' எடுக்கும் இந்த விபரீத முடிவு, பா.ஜ.க-வுக்குப் பலமாக அமையப் போகிறதா அல்லது பலவீனமாகப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாத்தி யோசிக்கச் சொல்லும் இந்த டீம், மேலிடத்தின் யோசனையை மாற்றப்போவது உறுதி!

- சிறப்பு நிருபர் எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+