சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அவசரம்.. வாங்க".. சட்டென அழைத்த அண்ணாமலை.. நாளையே நடக்கும் முக்கிய மீட்டிங்.. இப்பவே பிளானிங்காமே!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்று நடக்க உள்ளது. பாஜக நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. பாஜகவின் டாப் நிர்வாகிகள் மாறி மாறி பொதுவெளியில் மோதிக்கொள்கிறார்கள்.

கட்சிக்குள் இருக்கும் மோதல் பட்டவர்த்தனமாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது. சமீபத்தில் பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று காயத்ரி ரகுராம் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

பாஜகவில் பிரளயத்தை உருவாக்கி வரும் கேசவ விநாயகம் மீது விரைவில் நடவடிக்கை? வெல்லப் போகிறாரா அண்ணாமலை? பாஜகவில் பிரளயத்தை உருவாக்கி வரும் கேசவ விநாயகம் மீது விரைவில் நடவடிக்கை? வெல்லப் போகிறாரா அண்ணாமலை?

சீனியர்கள்

சீனியர்கள்

சீனியர்களை பாஜகவில் மதிக்கவில்லை. தமிழக பாஜகவில் இருக்கும் சிலர் சீனியர்களுக்கு எதிராக டிரெண்டிங் செய்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கு எதிராக ஒரு வார் ரூமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு எதிராக லைக் போட்டு செய்கின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி இவரை பாஜக தலைவர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையானது. இன்னொரு பக்கம் பாஜகவில் திருச்சி சூர்யா - டெய்சி விவகாரம் பெரிய சர்ச்சையானது. இவர்கள் இருவருக்குமான ஆடியோ உரையாடல் பாஜகவில் புயலை கிளப்பியது.

பாஜக உட்கட்சி

பாஜக உட்கட்சி

பாஜகவில் உறுப்பினராக இருந்த திருச்சி சூர்யாவிற்கு - டெய்சி சரணுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன் போனில் கடுமையான சண்டை நடந்தது .. இதில் சூர்யா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு சில பாஜக தலைவர்களின் பெயர்களும் இதில் அடிபடுகிறது. நீ எப்படி பதவி வாங்குன என்று தெரியும் என்று கூறி, அதோடு பாஜக தலைவர் ஒருவரின் பெயரும் அடிபட்டு உள்ளது. அதேபோல் நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது.. உன்னை தீர்த்து காட்டுவேன் என்று பேசி உள்ளார்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா பாஜகவில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார். அண்ணாமலைக்கு எல் முருகன், கேசவ விநாயகம் ஆகியோர் இடைஞ்சலாக இருப்பதாக சூர்யா நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த நிலையில் பாஜகவில் உச்சபட்ச உட்கட்சி மோதலுக்கு இடையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்று நடக்க உள்ளது. பாஜக நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணாமலை அவசரமாக டெல்லிக்கு சென்று அங்கு பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். டெல்லியில் மாநகராட்சி பிரச்சாரம் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், சில பாஜக தலைகளை சந்தித்தார்.

 அண்ணாமலை ஆலோசனை

அண்ணாமலை ஆலோசனை

பாஜக உட்கட்சி மோதல் தொடங்கி லோக்சபா தேர்தல் வரை பல விஷயங்கள் பற்றி இதில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று இரவு சென்னை வந்த அண்ணாமலை நாளை அவசர அவசரமாக உட்கட்சி கூட்டத்தை நடத்த உள்ளார். கட்சியின் டாப் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். உட்கட்சி பூசல், லோக்சபா தேர்தல், பூத் கமிட்டி உருவாக்கம், கூட்டணி அமைப்பது போன்ற விவரங்கள் குறித்து அண்ணாமலை ஆலோசனை செய்ய உள்ளார். டெல்லி தரப்பில் இருந்து தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு பூத் தொடர்பாக முக்கியமான ஆலோசனை ஒன்று வழங்கப்பட்டு உள்ளதாம். அதன்படி இப்போதே ஏரியா வாரியாக பூத் கமிட்டியை அமையுங்கள். உடனே பூத் கமிட்டியை உருவாக்கும் வேலையை பாருங்கள். பாஜகவை அடி மட்டத்திலிருந்து வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுங்கள் என்று டெல்லியில் இருந்து தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக தலைவர்களுக்கு டோஸ் விடப்பட்டு உள்ளதாம். இது தொடர்பாக நாளை ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Annamalai to hold a important meeting tomorrow amid the party tussle on open ground.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X