நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் முக்கிய சந்திப்பு! வேலுமணியை சந்தித்த விஜய்! இபிஎஸ்-ஐ புறக்கணித்தார்
சென்னை: முதல்வராகப் பதவியேற்ற விஜய் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அதன்படி இப்போது அதிமுகவின் வேலுமணியை நேரில் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார். அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில், அவரை சந்திக்காத விஜய், வேலுமணி- சிவி சண்முகம் தரப்பை மட்டும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் கடந்த மே 4ம் தேதி வெளியானது. அதில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவான நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 10ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து நேற்று திங்கள்கிழமை விஜய் உட்பட அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

விஜய்
தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் நேற்றைய தினமே முதலில் திமுக தலைவரும் மாஜி முதல்வருமான ஸ்டாலின் வீட்டிற்கு நேரடியாகச் சென்றார். அவரை வீட்டு வாசலுக்கே வந்து துணை முதல்வர் உதயநிதி வரவேற்றார். மேலும், ஸ்டாலினும் முதல்வர் விஜய்க்கு கட்டித்தழுவி வரவேற்றார். இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்தனர். தொடர்ந்து பாமக, மதிமுக, நாதக உள்ளிட்ட கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சந்திப்பு
இருப்பினும், நேற்று அதிமுக தரப்பில் யாரையும் சந்திக்கவில்லை. அதிமுக இரு பிளவுகளாக இருக்கும் சூழலில், இதன் காரணமாகவே விஜய் யாரையும் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இன்றைய தினம் அதிமுக வெளிப்படையாகவே இரண்டாகப் பிளவுபட்டது. ஒரு பக்கம் எஸ்.பி. வேலுமணி- சிவி சண்முகம் தரப்பு விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். அவர்களுக்கு அமைச்சரவையிலும் இடம் தரப்படும் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அமைச்சரவையில் பங்கு தொடர்பாக அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை.
அதேநேரம் மறுபுறம் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவெக அரசுக்கு ஆதரவில்லை எனச் சொல்லியுள்ளது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்றும் ஒருவேளை மாறி வாக்களித்தால் எம்எல்ஏ பதவிக்குப் பறிக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தனர். இதற்கிடையே அதிமுகவின் வேலுமணி - சிவி சண்முகம் தரப்பைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார்.
ஏன் முக்கியம்
மற்ற தலைவர்களைச் சந்தித்தது போல இதை வெறுமன மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமல்ல.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கலகம் செய்து, விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அணியின் முக்கியத் தூணாக வேலுமணி இருக்கிறார். நாளை நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் ஆட்சியை உறுதி செய்ய வேலுமணியின் ஆதரவு மிக முக்கியமானது.
எடப்பாடி பழனிசாமி
மேலும், நேற்று அனைத்துத் தலைவர்களையும் சந்தித்த விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, இன்று வேலுமணியைச் சந்தித்திருப்பது அதிமுகவுக்குள் இருக்கும் பிளவை விஜய் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வது போலவே தெரிகிறது.
முன்னதாக இந்தச் சந்திப்பின்போது லால்குடி எம்எல்ஏவும் லாட்டரி மார்டின் மனைவியுமான லீமா ரோஸும் உடன் இருந்தார். அப்போது விஜய்யை சந்தித்த லீமா ரோஸ், அவரது கைகளை எடுத்து கண்களில் ஒத்திக் கொண்டார். இது தொடர்பான வீடியோவும் கூட இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications