"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி, திரிணாமுல் மூத்த தலைவர்களை அவர்கள் கொல்லப் பார்ப்பதாகச் சாடியுள்ளார். மேலும், திரிணாமுல் கட்சியை முடக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் வங்கத்தில் தங்கள் கட்சியின் செயல்பாடுகளை முடக்கினால் டெல்லியில் சென்று போராட்டம் நடத்துவேன் என்றும் மம்தா எச்சரித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இந்த முறையும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை வெடித்தது. பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்த நிலையில், இப்போது மீண்டும் அங்கு அனல் பறக்கும் மோதல் சூழல் உருவாகியுள்ளது. அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி என வரிசையாகப் பல்வேறு தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களைக் கண்டித்து திரிணாமுல் சார்பில் போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது.

West Bengal Post-Election Tensions Mamata Banerjee

திரிணாமுல்

இருப்பினும், கொல்கத்தாவில் இந்தப் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி தமக்கு அனுமதி கிடைக்காவிட்டால் டெல்லியில் போராட்டத்தைத் தொடருவேன் என எச்சரித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கேட்டு கொல்கத்தாவின் ராணி ராஷ்மோனி சாலையில் நாளை போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகக் காவல்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் அவர்கள் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

போலீஸ் ராஜ்ஜியம்

கட்சியின் தொண்டர்களிடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய மம்தா பானர்ஜி போலீசாரின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக சாடினார். மேற்கு வங்கத்தில் தற்போது ஒருவிதமான போலீஸ் ராஜ்ஜியம் நடந்து வருவதாக அவர் சாடினார். ஜனநாயக ரீதியாகப் போராடும் உரிமையை போலீசார் நசுக்கி வருவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

தமது கட்சியின் சார்பாக வெறும் 100 பேர் மட்டுமே பங்கேற்கும் சிறு போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். சாலைப் போக்குவரத்து பாதிக்காத வகையிலேயே போராட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டதாக அவர் விளக்கமளித்தார். காவல்துறை வேண்டுமென்றே தங்களை அச்சுறுத்தி பாஜகவிற்குச் சாதகமாகச் செயல்படுவதாக மம்தா நேரடியாகக் குற்றம் சாட்டினார்.

சூழ்ச்சி

அவர் மேலும், "நாங்கள் குறிப்பிட்ட இடத்தில் அனுமதி தர விருப்பம் இல்லையென்றால் வேறு ஒரு இடத்தை போலீசார் பரிந்துரைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக அனுமதி மறுத்துள்ளனர். நாளை எனக்கு அனுமதி கிடைக்காவிட்டால் நான் டெல்லிக்குச் சென்று அங்குத் தனி ஆளாகப் போராட்டத்தில் ஈடுபடுவேன். பாஜக அரசு போலீசார் தூண்டிவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களைக் கைது செய்து அச்சுறுத்துகிறது.. எனது கட்சியை முடக்கவே இதுபோன்ற சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள்" என்று சாடினார்.

கொலை முயற்சி

பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி, மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களைக் கொல்லும் ஒரு திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியே இந்தத் தாக்குதல்கள் என்று குற்றம் சாட்டினார். "நீங்கள் அபிஷேக் மற்றும் கல்யாண் பானர்ஜியைக் கொல்ல முயன்றீர்கள்" என்று மம்தா நேரடியாகவே சாடினார். மேற்கு வங்கத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடப்பதாகவும், திரிணாமுல் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை நிர்வாகம் திட்டமிட்டு ஒடுக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அவர் மேலும், "கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தத் திரிணாமுல் காங்கிரஸுக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இருந்தபோதிலும், நாங்கள் இன்னும் வலிமையாக வருவோம். மாநிலத்தில் முழுமையான சட்டமீறல் நடந்து கொண்டிருக்கிறது.. எங்களின் ஓரிரு எம்எல்ஏக்களை பறிப்பதால் திரிணாமுல் காங்கிரஸ் பலவீனமடையாது" என்றும் கடுமையாக விமர்சித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+