ஆசிரியர்கள் குரலை நசுக்க முயற்சிப்பதை திமுக அரசு உடனடியாக நிறுத்தனும்.. பேசனும்.. அண்ணாமலை காட்டம்
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்கள் குரலை நசுக்க முயற்சிப்பதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை இன்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிக் கல்வித்துறையில் இசை, ஓவியம், தையல், உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில், சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த போதும் இவர்களுக்கு இத்தனை ஆண்டு காலம், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

கடந்த தேர்தலில், திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 181ல், "பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுகவின் நம்பிக்கைத் துரோகத்தை எதிர்த்து சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிப் போராடி வருகிறார்கள். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களைக், கைது செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் வரும் செய்தி மூலம் அறிந்தேன், இது மிகுந்த கண்டனத்துக்குரியது.

பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றி விட்டு, தற்போது ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்கள் குரலை நசுக்க முயற்சிப்பதை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியப் பெருமக்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான முடிவை எட்ட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications