விஜய் + அண்ணாமலை + ஓபிஎஸ்.. உருவாகும் புது டீம்! டெல்லி போடும் பிளான்! பாயிண்டை பிடித்த செந்தில்வேல்
சென்னை: பாஜக உடன் கூட்டணி சேர்ந்தால் அது விஜயின் அரசியல் வாழ்வுக்கே அஸ்தமனம் என்பது விஜய்க்குத் தெரியும்.. விஜய் பாஜக கூட்டணியில் இணைந்தால் அது திமுகவிற்கு மேலும் வலு சேர்க்கும் என்பது பாஜகவிற்கு தெரியும்... அதனால் ஒரு மெகா திட்டம் உருவாகி வருகிறது... என்று மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் எதிரி என்று டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர். துரோகத்தை வீழ்த்தவே நாங்கள் மூவரும் இணைந்துள்ளோம் என்று கூறிய டிடிவி தினகரன், சசிகலா வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய டிடிவி தினகரன், எங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமே பழனிசாமிதான். துரோகத்தை வீழ்த்தவே அமமுக தொடங்கப்பட்டது. அந்த துரோகத்தை வீழ்த்தும் வரை அமமுக ஓயாது. துரோகத்தை வீழ்த்தி ஜெயலலிதா ஆட்சியை உருவாக்கவும், ஜெயலலிதாவின் தொண்டர்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளோம், என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
அண்ணாமலை போஸ்ட்
இதையடுத்து பின்னர்.. செய்தியாளர்களை சந்தித்து பாஜக அண்ணாமலை பேசுகையில், நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் தூய அரசியலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பாஜகவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் வேலையை விட்டு வர வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் நல்ல அரசியலை கொடுப்பதற்கான கூட்டணி அமையும் என்ற எண்ணத்தில் தொண்டனாக என் பணிகளை செய்கிறேன்.
யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்ற கருத்தை சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. பிடித்திருந்தால் இருப்பேன்.. பிடிக்கவில்லை என்றால் கிளம்பி விவசாயம் பார்க்க போகிறேன். எங்கள் கைக்காசை செலவு செய்து அரசியலில் இருக்கிறோம். பிடிக்கவில்லை என்றால் அதே வேலையை சமூக இயக்கமாக மாறி பொதுமக்களுக்கு செய்ய போகிறோம். மாற்றத்திற்காக காத்திருக்கிறேன்.
சற்று பொறுத்திருங்கள்.. சரியான நேரத்தில் பேசுகிறேன்.. முதல் தலைமை அரசியல்வாதியாக மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்.. சில நேரம் மனசாட்சிக்கு எதிராகவும் பேசுகிறேன். மனசாட்சி ஒன்று சொல்கிறது.. வாய் ஒன்று சொல்கிறது.. அதிமுகவில் நடக்கும் எதற்கும் நான் பொறுப்பல்ல.. எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என்று அதிமுக தலைவர்கள் என்னை திட்டுகிறார்கள். அமித்ஷாவுக்கு கொடுத்த வாக்குக்காக காத்திருக்கிறேன். திரும்பி பேசுவதற்கு எவ்வளவு நேரமாகிவிடும் என்று தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல்
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் செய்துள்ள போஸ்டில், நேரடியாக பாஜக உடன் கூட்டணி சேர்ந்தால் அது விஜயின் அரசியல் வாழ்வுக்கே அஸ்தமனம் என்பது விஜய்க்குத் தெரியும்.. விஜய் பாஜக கூட்டணியில் இணைந்தால் அது திமுகவிற்கு மேலும் வலு சேர்க்கும் என்பது பாஜகவிற்குத் தெரியும்... அதனால் ஒரு மெகா திட்டம் உருவாகி வருகிறது... அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பிப்பது.. ( இதை பல மாதங்களுக்கு முன்பே நான் என் சமூக வலைத் தள பக்கத்தில் சொல்லியுள்ளேன் ) விஜய் , டிடிவி , ஓபிஎஸ் , செங்கோட்டையன், அண்ணாமலை ஆகியோர் கொண்ட கூட்டணியை உருவாக்கும் வேலையை தொடங்கி விட்டார் அமித்ஷா...இந்த வேலை வெற்றி பெற்று இப்படி ஒரு கூட்டணி உருவானால் , கடைசி நிமிடம் அதில் தேமுதிகவையும் , பாமகவின் ஒரு அணியையும் இதில் இணைக்கக் கூடும்.. தேர்தலுக்குப் பின் அதிமுக பாஜக அணியும் இந்த அணியும் இணைந்து ஆட்சி அமைப்பது போன்ற சூழலை உருவாக்க இருக்கவே இருக்கு தேர்தல் ஆணையம்... இதுதான் பாஜகவின் தமிழ் நாட்டிற்கான திட்டம்... இதற்கு எடப்பாடியும் உடந்தை என்பதே என் தொடர் குற்றச்சாட்டு.. என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications