அல்டிமேட்.. ரூ.50000 கடன் வேணுமா? அன்னபூர்ணா யோஜனா திட்டம் போதுமே? மத்திய அரசு சூப்பர்: பெண்கள் குஷி
சென்னை: பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் வேணுமா? மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த சூப்பர் திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவின் மகளிரின் நலனுக்காகவும், மகளிரின் வளமான வாழ்வுக்காகவும், மத்திய அரசு எத்தனையோ விதமான அறிவிப்புகளையும் திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது. இப்படி திட்டங்களை அறிவிப்பதுடன் மட்டுமல்லாமல், அந்த திட்டங்களில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் அன்னபூர்ணா யோஜனா திட்டம்.

ஆண்களுக்கு நிகராக பெண்களும், அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், சுயதொழில் செய்து பெண்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு இதனை செயல்படுத்தி வருகிறது.
சுயதொழில்: அதற்கேற்றபடி, சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்தபடியே வருகிறது.. இந்த பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதாலும், சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது பெரிய பிரச்சனையாக இருப்பாலும், பல பெண்கள் சுயமாக தொழில் தொடங்க வழியில்லாமல் உள்ளனர். இவர்களுக்காகவே கொண்டுவரப்பட்டதுதான் அன்னபூர்ணா யோஜனா.
மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், உணவு கே பிசினஸில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. பாத்திரங்கள், சமையல் கருவிகள், உணவுப் பொருட்கள், உணவு மேஜை உள்ளிட்டவை வாங்க இந்த தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அப்ரூவல்: இந்த கடனுக்கு அப்ரூவல் வந்தபிறகு முதல் தவணையை செலுத்த தேவையில்லை. கடனை எளிய தவணை முறையில் 36 மாதங்கள் அதாவது 3 வருடங்களுக்குள் திருப்பி செலுத்தலாம். சந்தை நிலவரம், வங்கி ஆகியவற்றைப் பொறுத்து வட்டி விகிதம் மாறக்கூடும்.
அந்தவகையில், கேட்டரிங் ஆரம்பிக்க விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக ரூ.50,000/- கடனாக வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த கடன்தொகையில், சமையல் உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, எரிவாயு இணைப்பு, சாப்பாட்டு மேஜைகள் வாங்கிக்கொள்ளலாம்..
கடன்தொகை: இந்த கடன் தொகையை திரும்ப செலுத்தவும், தொழில் முனைவோருக்கு அதே 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.. இந்த கடன் தொகையை பெண்கள் தங்களது தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி தானும் முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.
இதனை பெற விரும்பும் நபர்கள் கூடுதல் தகவலுக்கு எஸ்பிஐ வங்கியின் கிளைகளை தொடர்பு கொள்ளலாம். என்றும், SBI வங்கியின் மூலமாகவே தங்களது கடன் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாஷ் திட்டம்: சுயதொழில் தொடங்க வழியில்லாத பெண்களுக்கு மட்டுமல்ல, சுயமாக தொழில் தொடங்க ஆர்வம் இல்லாத பெண்களுக்கும் உத்வேகத்தை தந்து கொண்டிருக்கிறது மத்திய அரசின் அன்னபூர்ணா திட்டம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications