Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் முதலீட்டு மழை! இனி எச்பி லேப்டாப் முழுக்க மேட் இன் தமிழ்நாடுதான்! இது மோடி சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருப்பதால் வரிசையாக முதலீடுகள் குவிந்து வருகின்றன. இப்போது மத்திய அரசும் தமிழ்நாட்டிற்கு முக்கியமான முதலீடு ஒன்றை திருப்பி விட்டுள்ளது.. பிரதமர் மோடி அமைச்சரவையில் உள்ள அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். HP Inc. மற்றும் Dixon Technologies' Padget Electronics ஆகிய நிறுவனங்கள் இணைந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் HP மடிக்கணினிகள், பர்சனல் கணினிகள் உள்ளிட்ட சிஸ்டம்களை தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் HP வகை லேப்டாப்கள் முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும்.

electronic investment

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிவிப்பில்,, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த லேப்டாப் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்படும் உற்பத்தி தொழிற்சாலையில், சுமார் 1,500 பேர் பணிக்கு சேர்க்கப்படுவார்கள்.

HP Inc மற்றும் Padget Electronics ஆகியவை தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைத்து HP லேப்டாப்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்களை தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய வெற்றியாகும். . இதன் மூலம் தமிழ்நாட்டில் தொழிற் பெருகும், என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

தற்போது நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் பணிபுரிகிறார். இந்தியாவின் வளர்ந்து வரும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. இப்போது உருவாக்கப்படும் எச்பி உற்பத்தி ஆலை தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிற்சாலை ஆரம்பத்தில் தோராயமாக 1,500 வேலைகளை உருவாக்கும், மேலும் உற்பத்தி அதிகரிக்கும் போது மேலும் வேலைவாய்ப்புகள் உயரும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஹெச்பி மடிக்கணினி பிப்ரவரி 2025 க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

நம்பர் 1 தமிழ்நாடு; ஏற்கனவே 2023-24 நிதியாண்டில் 32.84% மொத்த பங்குடன் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 1.86 பில்லியனாக இருந்தது.

இந்த வருடம் இது 15 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியாக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கர்நாடகா வெறும் 4.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை மட்டுமே மேற்கொண்டு உள்ளது.

மற்ற மாநிலங்களின் அளவு:

உத்தரப் பிரதேசம் - $3.92 பில்லியன்
மகாராஷ்டிரா - $2.81 பில்லியன்
குஜராத் - $2.38 பில்லியன்
டெல்லி - $1.40 பில்லியன்
ஹரியானா - $625.94 மில்லியன்
தெலுங்கானா - $564.81 மில்லியன்

தமிழ்நாடு சாதனை: தமிழ்நாடு ஏற்றுமதியின் எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 31% ஆகும். அதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதியை $16.48 பில்லியன் ஆகும். ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% சதவிகித மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்த வருடம் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+