வங்க கடலில் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
சென்னை: வங்க கடலில் வரும் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. பின்னர் அது தீவிர புயலாகவும் மாறியது. ஒருகட்டத்தில் தீவிர புயல், வலு குறைந்து புயலாக மாறியது.

மாண்டஸ் புயல், மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. பின்னர் வலுகுறைந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலையாகி அரபிக் கடலுக்கு சென்றுவிட்டது. மாண்டஸ் புயலால் மிகப் பெரும் சேதங்கள் ஏற்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாண்டஸ் புயல் தாக்கத்தால் இன்னமும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
அத்துடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் உள் மாவட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. சென்னையிலும் பல இடங்களிலும் மழை பெய்திருந்தது.
இந்த நிலையில் வங்க கடலில் வரும் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதும் அது புயலாக உருமாறுமா? என்பது தற்போது கணிக்க இயலாது எனவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 16-ந் தேதி வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவும் மாறும்; அது இலங்கையை ஒட்டிய தமிழக மாவட்டங்களின் கரையை கடக்கும்; கரையை கடந்த பின்னர் உள்மாவட்டங்கள் வழியாக அரபிக் கடல் செல்லும்; அப்போது உள் மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என்பது வானிலை தொடர்பான ஆய்வாளர்கள் கருத்து.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications